பெண் மனம்

வெகு தூரமில்லை நீதான்
தொடும் அளவில் இருக்கேன் நான்தான்!
என் நெஞ்சுக்குள் இருந்தும்
இன்னும் தொடாமல் இருப்பதேன் நீதான்?
பையப் பைய பக்கம் வந்தேன் நான்தான்
தொட வரும் பொழுதெல்லாம்
வெட்கம் கொள்வது நீதான்...
தென்றலாய் நீ தீண்ட வந்தால் ...
நதியாய் தினம் வளைந்து நெளிந்து செல்வாள்
இளம் பெண்தான்!
அன்பு மிக்க காதலனிடமிருந்தும்...
ஆவலாய் பார்க்கும் இளைஞனிடமிருந்து...
ஒரு பெண்ணைப் பாதுகாப்பது
தமிழ் பெண்களின் நாணம்தான்!
அதானே!
தொட்டுப்பார் என்றால்
சும்மா விட்டுவிடுவேனா உன்னை?
ஒரு தென்றல் புயலாய் மாறும் முன்னே!
உடும்பாய் ஒட்டிக் கொண்டால் என்ன அன்பே?!
தென்றல் தீண்டல் தொடரத் தொடர...
வேண்டல் மிகுதியாகுமே!
பெண்ணுக்கு ஆவல் கூடும் போது
வெட்கங்கள் என்ன செய்யும்?
போதும் போதும் எனச் சொல்லுமோ!
இன்னும் வேணும் வேணும் எனக் கெஞ்சுமோ?
இடி மின்னலைத் தாங்கும் இடிதாங்கி போலே
சுமை தாங்கிதான் பெண் மனமும் இங்கே!
ஒரு வீட்டில் பெண் மட்டும் இல்லையென்றால் ...
அந்த வீட்டில் இருட்டுதானே சூழ்ந்திருக்கும்!
உன் வலது காலினை எடுத்து வைத்து
என் வீட்டுக்குள் நுழைந்து
குத்து விளக்கு நீ ஏற்றுவதெப்போ?
இன்ப வெளிச்சம் வந்து
துன்ப இருளைப் போக்காமல் இருக்குமோ- அப்போ?!