தினம் ஒரு காதல் தாலட்டு - தனிமை 72 = 181

தெற்கோரம் உயர்ந்த கோபுரம்
முத்தாரம் மார்பில் தவழ்ந்திடும்
எத்தனித்து எழுந்த வேளையில்
காதல் பச்சைக்கிளி பாடுது மோகனம்

குஜிலியாம் பாறையிலே
குத்தவச்ச அத்தை மகளே
நெல் குத்த வாரேனடி
சொல் குத்த வேணாமடி

வட்டமிடும் வண்ண மயிலே
நோட்டமிட்டேன் உன்னை தனியே
கட்டம்கட்டி என்னை ஒதுக்கி
எட்டுவச்சி போகாதடி…!


செம்பருத்தி பூ போல
என்னருகே நீ வந்தால்
சம்பங்கி சேலை கட்டி
செவ்விதழில் வீணை மீட்பேன்


போதுமென்று சொல்லும்வரை
கனியை கவ்வி பிடிப்பேன்
விட்டுவிடு என்றாலும்
விடாமல் முறண்டு பிடிப்பேன்

தாகம் தணிந்தாலும்
தாகமாய் இருகுதென்பேன்
மோகம் தீர்ந்தாலும்
முந்தாணையில் முகம் புதைப்பேன்

காலை விடிவதை கன்றாவி என்பேன்
கவலை காவியமே மன்றாடி பிரிவேன்
மாலை வந்ததும் ஒன்றாகி மகிழ்வேன்
மதலை உனக்களித்து நன்றாக வளர்ப்பேன்

நாளை மீண்டும் வரும்
நம்முடல் சக்தி பெறும்
நேரம் வீணானால்
விரகம் விரக்தி தரும்..

எழுதியவர் : சாய்மாறன் (3-Aug-16, 10:00 pm)
பார்வை : 118

மேலே