சிறுநீரக கல் நீக்கும் பீன்ஸ்

சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து பீன்ஸ் இந்த நோயால் அதிகம் மக்கள் அவதியுறுகிறார்கள் இதற்கு தீர்வாக பல சிகிச்சைகள் முன்வைக்கப் பட்டாலும் பிரச்சனை என்னவோ அப்படியேதான் இருக்கிறது அலோபதி மருந்துகள் லேஸர் சிகிச்சை ஆயுர்வேத மருந்துகள் மற்றும் இயற்கை முறையில் நெருஞ்சில் முள்,வாழைத்தண்டு என பல முறைகளில் முயற்சித்தாலும் பலன் என்பது குறைவு தான்.

சமீபத்தில் நெட்டில் உலாவும் பொழுது தற்செயலாக ஒரு ஆங்கில வலை மனையில் இந்த குறிப்பை கண்டேன் அதை நண்பர்களுக்கு பரிந்துரைத்தேன் அருமையான பலன் அப்புறம் நெட்டில் தேடினால் பல தமிழ் வலைபூக்களிலும் இது பகிரப் பட்டுள்ளது.

இது மிக மிக சாதாரணமாக நாம் நம் அன்றாட சமையலில் பயன் படுத்த கூடிய ஒரு காய் ஃப்ரென்ச் பீன்ஸ் இது சிறுநீரக கல் நோயை முற்றிலும் குணமாக்குகிறது இதை எப்படி பயன் படுத்துவது என கீழே படிக்கவும்.

கால் கிலோ பீன்ஸை வாங்கி அதன் பக்கவாட்டு நார் மற்றும் கொட்டைகளை நீக்கிவிட்டு பீன்ஸின் தோலை மட்டும் ஒன்று அல்லது ஒன்றேகால் லிட்டர் தண்ணீ ரில் மிதமான சூட்டில் ஒன்றறை மணி நேரம் வேகவைக்கவும். அந்த நீர் அரை லிட்டராக வற்றிய பின்பு அதை சிறிது ஆற வைத்து நன்கு வெந்த பீன்ஸ் மற்றும் நீரை மிக்ஸியில் இட்டு கூழ் போல் அரைத்து குடித்து விடவும்.

முதல் தடவை குடிக்கும் பொழுது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் போக போக அதுவா பழகிவிடும் அந்த மிக்ஸியில் அரைத்த பீன்ஸ் கூழை குடித்த பின் நீங்கள் தொடர்ச்சியாக 3 முதல் 4 லிட்டர் தண்ணீர்குடிக்கவேண்டும்.
இந்த 4 லிட்டர் நீர் கூழ் குடித்த அடுத்த 5 மணிநேரத்துக்குள் நீங்கள் அருந்திவிடவேண்டும்.

கல் உடைந்து கண்டிப்பாக நீரில் வெளியாகிவிடும் இந்த முறையை சரியாகும் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என பின்பற்றி வாருங்கள் குணம் ஆனபிறகு வாரம் ஒரு முறை குடித்தீர்கள் என்றால் ஆயுளுக்கும் வரவே வராது நீங்கள் எந்த குழப்பமும் இன்றி இதை பின் பற்றலாம் இதில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை எனக்கு தெரிந்து அதிகம் பேர் பலனடைந்துள்ளார்கள்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (3-Aug-16, 10:08 pm)
பார்வை : 118

மேலே