தினம் ஒரு பாட்டு இயற்கை - 27 = 182

இது அந்திசாயும் நேரம்
வானில் விண்மீன்கள் மேயும்
உற்று உற்றுப் பார்த்தால்
ஒவ்வொன்றும் மின்மினியாகும் !

இது எந்திர உலகம்
எத்தனை எலக்ட்ரான்கள் ஜனனம்
இருந்தும் இன்றுவரை
விண்மீன்களை எண்ண முடிந்ததா ?

இன்சார்ட் ராக்கெட் இடைவிடாமல் சுற்றுது வானில்
இயற்கையின் நிலையை சொல்வது அதன் வேலை
விண்மீன்களின் கணக்கை எண்ணிச் சொன்னால்
இன்டசார்ட்டின் என்ஜின் என்ன கெட்டா போகும் ?

சூரிய குடும்பத்தின் செல்லப் பிள்ளைகள்
வானில் வலம்வரும் தாரகை மீன்கள்
இரவு முழுவதும் தூக்கம் மறந்திடும்
உலகம் முழுவதும் பூக்கள் பொறித்திடும் !


அக்னி நட்சத்திரம் ஆளை சுட்டெரித்திடும்
அனல் கக்கிட்டதும் உச்சம்தலை வெப்பப் படும்

எரி நட்சத்திரம் எரிந்துவிழும் சமயம்
எவர் பார்த்தாலும் ஞாபகமறதி ஏற்படும்

வால் நட்சத்திரம் அதன் வாலின் நீளம் என்ன தூரம்
அதை நீள அளவியால் அளக்க முடியாத காரியம்

துருவ நட்சத்திரம் பார்ப்பதே பெரும் பாக்கியம்
மானுட மாந்தருக்கு அது தரும் பிரமோச்சவம்

வெள்ளி நட்சத்திரம் தலைமைத் தாங்கும் ஒளிச் சித்திரம்
தன்பிள்ளைகள் கூட்டத்தை வழிநடத்தும் குடும்ப பாத்திரம்.

எழுதியவர் : சாய்மாறன் (4-Aug-16, 9:49 pm)
பார்வை : 147

மேலே