உன் பாதைகளில் காத்திருக்கும் நான்

உன் இருவிழி மந்திரத்தால்
எனை வசியம் செய்து
இம்சிக்கிறாய்..!

அந்தி வானை நினைவுறுத்திச் செல்கின்றன
உன் நெற்றியிடைக்
மஞ்சளும் குங்குமமும் ..!

நீ தொடுத்த மலர்ச்சரங்களுள்
என் இதயத்தையும் சேர்த்து
பிணைத்து சூடிக் கொண்டாய்..!

சேலை உடுத்தி செல்லும் உன் கம்பீரத்தால்
என் ஆண் கர்வத்தை
நிலை குலையச் செய்து
உன் யாசகனாக்கிச் செல்கிறாய் அன்பே..!

நீ கடக்கும் பாதை எங்கிலும்,
உன் கொலுசொலி கேட்கவே காத்திருக்கிறேனடி...!

தமிழின் ஆகச் சிறந்த கவிதையை எழுதியவன்
நானாய் இருக்க ஆசைப் படுகிறேனடி
உன்னை வர்ணித்து எழுதுவதால் ...!

எழுதியவர் : காதல் (5-Aug-16, 4:27 pm)
பார்வை : 209

மேலே