ரசிகன்

என் மனதின் சுமைகளெல்லாம்

நெஞ்சுக்குள் சேர்த்து வைப்பேன்

நிரம்பி வழிந்துவிட்டால்

காகிதத்தில் நான் பிடிப்பேன்

இப்படித்தான் சேர்த்து வைப்பேன்

எத்தனையோ கவிதைகளை

சேர்த்து வைத்து என்ன பயன்

சீண்டுவார் யாருமில்லை

அவன் ஒருவன் மட்டும் விரும்புகிறான்

நான் எழுதும் கவிதகளை

இதோ வந்துவிட்டான் என்னிடத்தில்

எடைக்கு அதை வாங்கிவிட

எழுதியவர் : கே . எஸ் .கோனேஸ்வரன் (5-Aug-16, 5:19 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : rasigan
பார்வை : 97

சிறந்த கவிதைகள்

மேலே