அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள்-இவளோ!
அகிலம் போற்றும் அழகியோ!
பாரினில் உலா வரும் பால் நிலவோ !
பார்ப்போர் ரசிக்கும் ராணியோ!
என்
கனவு கன்னியோ...!
கார்மேக கூந்தலில் சூடிய
மலரில் உதிர்ந்த துகள்கள் தான்
விண்மீன்களோ ...!
பூங்குவளை விழியில் மிதக்கும்
மீன்களை பிடிக்க துடிக்கும்
வில்லென இரு புருவங்கள்...!
மாதுளை கன்ன சதுப்பில்
மயங்காத காளை உண்டோ ...!
பச்சரிசி பற்களை குவித்த
குங்குமப்பூ இதழை பாலில்
கலந்த தித்திப்புதான்
புன்னகையோ...!
செங்காந்தள் பூவின் இதழ் போன்ற
விரல்களை பிடித்து
நடைபழக விரும்பும்
நாணல்கள்...!
வாழைக்குருத்து காலில் விழும்
வஞ்சிக்கோட்டை வாலிபர்கள்...!
பட்டு போன்ற உடலை
பார்த்தவுடன் குளிர் காய்ச்சல்
பரிதிக்கு....!
பிரம்மன் படைத்த கலைமகளோ!
பல்லவன் வடித்த சிலைமகளோ !
பாரதி கண்ட புதுமையோ !
புதுமைப்பித்தன் வார்த்த வாகையோ!
கம்பனின் கற்பனையோ !
காளிதாசனின் கனவோ -இவளே
அழகிய தமிழ் மகளோ...!
சேலையில் வடித்த சிற்பமோ !
செந்தமிழின் தித்திப்போ !
சொர்க்க வாசலின் சொப்பனமோ!
தமிழ் மகளின் அழகியே
இவள்தானோ .....!