கவிதையே தெரியுமா - ப்ரியன்

உன் தந்தைதான்
பெருங்கவிஞனடி;
நானெழுதும்
கவிதைகளை விட
உன்னையல்லவா
எல்லோருக்கும்
பிடித்துவிடுகின்றது.

***********************
எப்பொழுதாவது
ஒரு முறைதான்
முகம் காட்டுகின்றாய்
எனக்கு மட்டும்;
எழுதிட தோன்றும்
என் கவிதை போல.

***********************
அன்னநடை பயில
ஆசை மறந்திடும்;
உன் நடைபார்த்தது
கவிதையெழுதி
பழகிடும் காலமிது

***********************
தினம் முகப்பூச்சு
பூசுகின்றாயா இல்லையா
தெரியவில்லை;
என் எழுத்துகளுக்கு
கவிதையின் சாயம்
பூசிவிடுகின்றாய் நீ

***********************
உன்னைபற்றி நானெழுதும்
கவிதைகளில் வரும்
எழுத்துப்பிழைகள் குறைவு;
உனைபற்றி முழுமையாய்
எழுதிட முடியாததே
பிழைகளாய் இருக்க.

***********************
பேருந்து பயணத்தின்
நெரிசலில் கிடைக்கும்
என்னருகில் இருக்கையில்
அமர நினைக்கின்றாய்;
என் கவிதைகள்
காணாமல் போகின்றன.

எழுதியவர் : ப்ரியன் (5-Aug-16, 9:10 pm)
பார்வை : 135

மேலே