கேலியும் கேள்வியும்

கேலிக்குரிய நீ கேலி செய்கிறாய்
கேள்விக்குரிய நீ கேள்வி கேட்கிறாய்

உன்
வஞ்சக, வன்மக் குரூர
வாய்க்கொழுப்பை
எலும்புகள் பொறுக்கித் தின்னும் நாய்கள்
நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு
சப்புக்கொட்டி ரசிக்கின்றன.

உன்
அழிப்பின் ஆட்டத்தை
நீயே
ரசித்துக் கொண்டிருக்கிறாய்.

பொய்யாய் போவது
புரியாமல்
பொய்கள் மட்டுமே
பேசுகிறாய்.

எழுதியவர் : கனவுதாசன் (7-Aug-16, 12:55 pm)
பார்வை : 74

மேலே