என் அன்புத் தோழியே

உன் கை கோர்த்து
நான் தொடங்கிய பயணம்
நம் வாழ்வின் எல்லைவரை
முடியாது நீள வேண்டும் - அன்புத் தோழியே.....

அழும் போது கண் துடைத்து
சிரிக்கும் போது உற்சாகம் தந்து
பசி என்றால் ஊட்டி விட்டு
எனக்கு இன்னோர் தாயானாய் - அன்புத் தோழியே.....

துக்கம் கொண்டு நான் விம்மினால்
தோளில் சாய்த்து ஆறுதல் தந்தாயே
தூக்கம் வருகையில்
மடி சாய்த்து தலை கோதினாயே
உன் தொடுகையில் நானுணர்ந்த நிம்மதி
என் தாயிடமும் உணர்ந்ததில்லையடி என் அன்புத் தோழியே.....

இன்னும் நான்
எத்தனை பிறப்புக்கள் எடுத்தாலும்
அத்தனையிலும்
நீ வேண்டும்
என் அன்புத் தோழியாக!!!

****இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்****

எழுதியவர் : துவாரகா (7-Aug-16, 11:43 am)
Tanglish : en anbuth thozhiye
பார்வை : 185

மேலே