பொன் விளையும் பூமி

வாய்க்கால் ஓரம்
தென்னமரம்
வரப்புல தான்
சண்ட வரும்
அங்காளி பங்காளி
நாங்க தான்டா
அடிச்சாலும்
புடிச்சாலும்
வந்து நிப்போமடா
*********
வரப்புல பாம்பு ஓட
வாய்க்காலுல நாங்க விழ
ஆட்டம் போட்டு
பாட்டு பாடி
மிதப்போம்
நாங்க பம்பு செட்டுல
*********
தென்றல் காற்று
சிலுசிலுக்க...
மருத நிலத்தில்
மாமன் இருக்க...
ஊடல் செய்ய
வா புள்ள
உசுரே போது உன்னால
ஊடல் செய்ய
வா புள்ள
உசுரே போது தன்னால
*********
சேத்துல உருண்டு
பிரண்டு
வயல் நண்டு பிடிப்போம்
கூட்டாஞ்சோறு
ஆக்கிதானே
கூட்டாதானே உண்போம்
பட்டாம்பூச்சி
பறவை கூட்டம்
போல தானே பறப்போம்
சின்ன சின்ன சண்ட
போட்டு சீக்கிரம்
பேசிடுவோம்
பப்ப பப்பா
பப்ப பப்பா
பாபேபே பாபபப்பா
*********
பனி துளி பேசும் மார்கழி வாட
என்னைக்கும் தானே
எங்க காட்டில் மழ
தநனானே நானா
தநனானே நானா
தாநனா தாநனா
தானேனே நானா
கருமேக கூட்டம்
மழை கொண்டு வருது
நெஞ்செல்லாம்
நெஞ்செல்லாம்
சில்லென்று
நனையுது
*********
பால் நிலவின்
ஒளியில்
தென்றலின் வருடலில்
தேகத்தின் கதகதப்பில்
பனம் பழம் சுட்டு
உண்டது
தனி சுகம்
கொல்லையிலேயே
காவலுக்கு இருக்க
ஓடி பிடித்து விளையாடியதும்
பசும் புல்லை தழுவி தூங்கியதும்
பூக்களின் தேசத்தில்
ஒளிந்ததும்
காவிரியின் மடியில் கிடந்ததும்
அங்கே ஓர் குடில் போட்டு
விளைந்ததை பார்த்து
ரசித்ததும்
அதை கட்டித் தழுவி முத்தமிட்டதும்
முயல் குட்டியை
பிடிக்க
மூர்ச்சையானதும்
அருவியில் குளிக்க அடம்பிடித்ததும்
மாமரத்து மாங்காயை
விரும்பி கடித்ததும்
காலை கதிரவனை வேண்டிக்கொண்டதும்
மாட்டு வண்டி பூட்டி ஊர்வலம் சென்றதும்
ஏர்பூட்டும் காலில்
மண்வாசம் மணந்ததும்
மழைவந்ததும்
மேகத்தின் நேசம் புரிந்ததும்
சேற்றில் இறங்கி ஆட்டம் போட்டதும்
அதில் கப்பல் இட்டதும்
அந்த கப்பல் ஈட்டித் தந்த
ஆயிரமாயிரம் நெல்மணிகளையும்
மழலையின் குரலை போல்
குருவிகளின் ரீங்காரமும்
மறக்க முடியுமா!
நெஞ்சில் இருந்து அகலுமா.................
*********
காணும்
இடமெல்லாம்
பசுமை செழித்திருக்க
பாவி இன்று நான்
காணுவது
காட்சியா......
பட்ட மரம்
காய்ந்த நிலம்
ஒட்டி போன வயிறு
நிலத்தை செழிக்க பூச்சிமருந்தா?...
அந்த பூச்சிமருந்துக்கு
என் நண்பன் விருந்தா?.....
முப்போகம் விளைந்த பூமியில்
முன்னூறு நாள் சுமந்து
பெற்ற தாயை விட்டு
போகிறேன்
என் தாயிற்கு
என்னை உரமாக்கிடுங்கள்
என் தாயவள்
மலடாய் மாறக் கூடாதே
மாறக் கூடாதே.....
பூமியில் நீர் இல்லை
பூ இல்லை
விஷ வாயு போகும்
பறவை கூட்டம் எங்கு போகும்?
பூமி செழிக்கும்
பூ மலரும்
பூவே உன்னை
நான் நாடி வருவேன்
உன் மடியில் வாழ வருவேன்
அதுவரை
என் தாய்பூமியை
பண்படுத்துவேன்
மீண்டும் ஓர்
பொற்காலம்
நாம் வாழுவோம்
மருதா
உன் மடிக்காக தான்
காத்திருக்கிறேன்
வயல்வெளிகளில்......
சிந்தும் கதிர் போல்!...
விரைந்து என்னருகில் வாடா
# விளை நிலத்தை
விலை நிலமாய் மாற்றாதீர்
# கானகத்தை கான்கிரீட் காடுகளாய்
ஆக்காதீர்
# கானல் நீரிலே நீரை
தேட விட்டுவிடாதீர்
# மண்மணம் வீசும் சேறு போய்
துர்நாற்றம் வீசும் கூவம் வந்ததை
ஒழிப்பீர்
# பூ மணம் வீசும் தென்றல்
ஓய்ந்தது.
காரணம் மரம் இன்மை.
நச்சு வாயு காற்றில் கலப்பதை
மரத்தால் தடுப்பீர்
# வளங்களை
அழிக்காதீர்
குப்பைகளை கண்ட இடங்களில்
கொட்டாதீர்
# எல்லாவற்றையும் அழித்துவிட்டு
எதில் வாழ்வோம்
எப்படி வாழ்வோம்
நாம்
~ பிரபாவதி வீரமுத்து