சில நேர வெறுப்புகள்

மனக்காயம் ஆறாமல்,
மங்காத சோகத்தால்,
மறையாமல் நிற்கிறதே துன்பம் - அது
வெறுப்புக்கு ஏனோஓர் இன்பம்!

தவிப்புகளின் கோரஓசை
தத்தளித்து என்காதில்
தவறாமல் எனக்குமட்டும் கேட்கிறது - அதனால்
தீப்பிடித்து மனமேனோ எரிகிறது!

வாழ்க்கையின் ஆழத்தில்
வந்தருள சுகஇன்பம்
ஒருசொட்டு கூட எனக்கில்லை - ஆனால்
பலசொட்டு கண்ணீர் எனைவிடவில்லை!

மூளைக்குள் சிந்தனையை
மூலதனமாய் நான்பொருத்த
காரணங்கள் முடிவுக்கே வரவில்லை - இதனால்
காயங்கள் விடைபெற்று போகவில்லை!

உலகத்து பாரத்தை
உள்ளுக்குள் திணித்துபோல்
இதயத்தில் எரிமலையே வெடிக்கிறது - இதனை
இன்பங்கள் தள்ளிநின்று ரசிக்கறது!

யாருக்கு இன்பமில்லை?
யாருக்கு துன்பமில்லை?
எனக்குமட்டும் நடப்பதுபோல் தோன்றுதே -இது
எந்தயுகம் எடுத்தினும் எனைவிடாசாபமே!!

எழுதியவர் : (11-Aug-16, 9:45 pm)
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே