ஏ இங்க வா

சாய்ங்காலமா
நீ பாட்டுக்கு
கடற்கரைல கால் நனைச்சுட்டுப் போய்டற.
அது பாரு, என்னமோ கடவுளைத் தொட்டமாதிரி
ராத்திரி பூரா
அந்த பொங்கு பொங்கிட்டுக் கெடக்கு...

ஒருநாள் எங்க தேவிப்பட்டினத்துல
வந்து கால் நனைச்சுட்டுப் போயிடு.
ரொம்ப நாளா
அந்த பெண்கடல்
கம்முன்னு
அலையே வராமக் கெடக்கு...!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (11-Aug-16, 9:52 pm)
பார்வை : 128

மேலே