வரலக்ஷ்மி தருவாள் வரங்கள் -- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வரங்கள் தந்திடும் தேவி !
----- வருவா யில்லமே நாடி !
சிரமும் தாழ்த்தியே நானும்
----- சிறப்பாய்ப் பாடுவேன் நாளும் .
விரங்கள் குங்குமம் தொட்டு
---- விரைந்தே நெற்றியி லிட்டு
கரங்கள் கூப்பியும் நன்றே
---- கனிந்தே வணங்குநாள் இன்றே !!
வாய்பாடு :-
மா + விளம் + மா ( அரையடிக்கு )

