காதல் வண்ணம்

வானவில்லை ஈன்ற மேகமே...
என்னெழில் மகளை
நான் தினம் காண வேண்டுமே...!

உன் அனுமதியோடு
நான் அவளை கைபிடிக்க வேண்டுமே...!

நிறம் பார்த்து காதலிக்கும்
மனம் கறுப்புதான்...!
என் உள்ளமோ...
உன் மகளை விட வெளுப்புதான்...!

கண்களை மூடிக் கொண்டு
காணுகின்ற பொழுதில்...
இருள்தான் உன்னை சுற்றியிருக்கும்...!

அதையே சற்று கனவாக பார்...
பல வண்ணம் அதிலே வெளிப்படும்...!

ஆப்பிரிக்கத் தோல்களுக்குள்
ஒழிந்து கொண்டு துடிக்கும்
ஐரோப்பிய இதயத்திற்கு
ஏன் - தெரியவில்லை...?
பகலும் இரவும் இணைந்ததுதான்
ஒரு நாள் என்று...!

மனக் கதவை திறக்காமல்...
வெளி உலகத்தின் வெளிச்சத்தை
எப்படி பார்க்க இயலும்..?

காதலை ஆக்குவது மட்டுமல்ல...
உண்மைக் காதலை அழிப்பதும் கடினம்தான்...!

வாழ்க்கைக்கு வண்ணம் தேவையில்லை...
நல்ல உள்ளம்தான் வேண்டும்...!

ஏழு வண்ணங்களை பூசினால் ...
அது வானவில் ஆகாது...!

இயற்கைக்கு இணையாக
செயற்கை நிற்காது...!

கோடிக் கணக்கில் பணமிருந்தால் மட்டும் போதாது...
ஏழை பெறும் இன்பத்தை நீ அனுபவிக்க முடியாது...!

வானவில்லை ஈன்ற மேகமே...
என்னோடு உன் மகள் வாழ வேண்டுமே...!
வர்ணம் பார்க்காமல் ...!
இணைந்த மனதை பாருங்கள்...
வாழ்ந்து காட்டுகிறோம் ...
நீங்கள் நினைத்ததிற்கு ஒரு படி மேலாக..!
முதல் எடுத்துக்காட்டாக...!

எழுதியவர் : கிச்சாபாரதி (12-Aug-16, 8:44 pm)
Tanglish : kaadhal vannam
பார்வை : 124

மேலே