ஆசைப்படும் தோழா
ஆசைகள் உன்னை துரத்தினால்
அது துன்பம் ...!
ஆசைகளை நீ துரத்தினால்...
அதுதானே...இன்பம்...!
கடந்து வந்த பாதையை
மறந்து வாழ்பவன் மனிதனில்லை...!
மனிதர்களுக்கிடையில்...நிலவுகின்ற ...
சண்டைகள் யாவும்...
ஆசைகளினாலும்....
அறியாமைகளினாலும்...
ஏற்படுகின்றதே தவிர....
அறிவுகளால் அல்ல....!
வாழ்க்கைக்கு உடும்புப்பிடி தேவைதான்...
அதற்காக...
கொள்கையில் மாற்றம் இல்லையென்றால்...
புதுமை எனும் வளர்ச்சி காணமல் போய்விடும்...!
தன்னைத்தானே பகுத்தறிந்து கொள்ளுங்கள்...
சுயநலத்திற்காக நாட்டை அடிமையாக்காதீர்கள்...!