தேடுத்தேடு•••

எனக்கும் அவளை பிடிக் கவில்லை அவளுக்கும் என்னை பிடிக்கவில்லை தலையில கட்டிட்டாங்க அவுங்க வீட்டு கிழங்களை யும் சேத்துதான் சொல்றேன்"

( உயிருக்கு உயிரான தன் நண்பனிடம் பேசிக் கொண்டது )

" கூல் கூல் எந்த வீட்ல இப்படியெல்லாம் நடக்கல, வீட்டுக்கு வீடு வாசப் படிதாண்டா, இதை சால்வ் பண்ணிட்டா லெவல் ஆயிடும், இதுக்கெல்லாம் போயி வீணாக டென்ஷன் ஆயிட்டா எப்படி"
ஆருதல் சொன்னான் சித்ரஞ்சன்

" அட நீ ஒன்னு டெய்லி லஞ்ச் பாக்ச தொறந்தா அதுல சாப்பாட்ட பாக்கிரதுக்கு முன்ன கேசத்தை தான் கண்ல படுது அது தெரியாமல் விழுந்ததா இல்ல வேணுமுன்னு போட்டதான்னு ஒரே சந்தேகம் அத அப்படியே கொட்டிட்டு கேன்டீல்ல எதையாவது வாங்கி போட்டுக்குவேன் குடும்பமுன்னு ஒன்னு இருந்தும் இப்படி ஒரு பொழப்பாடா"
அங்கலா யத்துக்கொண் டான் ரமேஷ்

"சரி டைம் ஆவுது அப்பறம் பேசலாம் நண்பா••••ம்•••• பேனாவுல கேமரா இருக் காமே எனக்கொன்னு வாங் கிட்டுவா " ( சித்ரஞ்சன்)

"ஒக்கே••• பாய்••••" (ரமேஷ்)

(மறுநாள் சித்ரஞ்சன் ரமேஷை ஆப்பீல மீட் பண்ணி அந்த பேனா கேமராவைப்பத்தி கேழ்கிறான்)

"ம்•••••-வாங்கிட்டு வந்திருக் கேன் இங்கேயே இரு இரண்டு நிமிஷம் பேக்ல இருந்து எட்த்துக்கிட்டு வாரேன், பையில் அந்த பேனா கிடைக்கவில்லை நேற்று போட்டிருந்த சட்டை பாக்கெட்டி ல் வைத்து துணிமாத்தும் போது எடுக்க மறந்துட்டு இருக்கேன் ஒன்னு பண்ணு ஈவனிங் ஆப்பீஸ் முடிஞ்சி என் கூடவே வா வீட்ல இருந்து எடுத்து கொடுக்கிறேன்" (ரமேஷ்)

"சரி ரமேஷ் நான் ஈவனிங் உன்னை மீட் பண்றேன் வரட்டுமா" (சித்ரஞ்சன்)

"ஓக்கே" (ரமேஷ்)

(ஈவனிங் சித்ரஞ்சன் ரமேஷ்கிட்ட கரைக்டா டயத்துக்கு வர வீட்டுக்குப் போயி அந்த பேனாவை எடுத்து வந்து சித்ரஞ்சனிடம் கொடுத்தான் ரமேஷ்)

"சரி எவ்வளவு ஆச்சி"

"இந்தா அதுக்கு உண்டான பில்லு"

"அடங்கப்பா எட்டு நூறு ரூபாயா. "

"சரி இந்தா பணம் அப்போ நான் வரட்டுமா ரொம்ப தேங்ஸ் நண்பா"

(சித்ரஞ்ன் அதுல இருந்த காட்லாக் படித்து ஆப்ரேட் பண்ணி பாக்கிறப்போ)

" ஓ மை காட்"
•••••••
(ஒரு வாரம் கழித்து இருவரும் சந்தித்தனர் )

" நான் தீர ஆலோசித்து தான் சொல்றேன் எனக்கு பொண்டாட்டின்னு வந்தவக்கூட எனக்கு சுத்தமா வாழப்புடிக்கல. பேசாமல் டிவோர்ஸ் பண்ணிடலாமுன்னா••• ஒரு காரணமும் அக்சப்டேபிலா இல்ல என்ன பண்றதுன்னு எனக்கு ஒன்னும் புரியல மைண்டு அப்செட்டாயி இருக்கேன் நீ ஏதாவது வழியை சொல்லேன்" என்று ரமேஷ் கேட்டான்

"சரியாப்போச்சி ஒரு குடும்பத்துல விளகேத்தி வைக்கச்சொல்லுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன் நீ என்னடான்னா ஒரு குடும்பத்த பிரிக்க ஐடியா கேக்கிறே" ( சித்ரஞ்சன்)

(அப்படின்னா வீட்டில நடக்கிற நாடகம்பத்தி இவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது ஸ்மூத்தா காயை நவுத்துறா பொம்பள என சித்ரஞ்சன் தெளிவாக தெரிந்துக் கொண்டான்)

"ரமேஷ் இந்த கேமரா ஏங்கிட்ட கொடுத்தியே அது எப்படிவேலப்பண்ணுதுன்னு ஏதாவது செக்பண்ணி பாத்துதானே வாங்கிவந்தே" (சித்ரஞ்சன்)

"இல்ல எனக்கென்ன தெரியும் அதைபத்தி அவனே இப்படி இப்படின்னு பண்ணி காட்டினான் PC போட்டும் காட்டினான் ஏன் சரியா வேலசெய்யலியா" (ரமேஷ்)

" இல்லில்ல அவங்கிட்டே இருந்து வாங்கி பாக்கட்டில வச்சிருக்கே அது ஆன்ல இருந்திருக்கு அந்த PC ல
ஷோரூம் எங்க இருந்து வீடுவந்தியோ வந்த ரோடு உன் வீடுகூட அதுல பதிவாகி இருந்தது" (சித்ரஞ்சன்)

"அப்படியா அப்போ நல்ல பொருள்தான் போல இருக்கு" (ரமேஷ்)

" நீ அன்னைக்கு மறந்து வீட்ல விட்டுவிட்டு வந்தது கூட ஒரு நல்லதுக்கேன்னு நெனைக் கிறேன்" (சித்ரஞ்சன்)

"அப்படி ன்னா நீ என்ன சொல்லவர எனக்கு ஒன்னும் புரியலியே" (ரமேஷ்)

"கடவுள் என்மூலமா உன் கிட்ட இந்த கேமராவை கேக்கவச்சி நீ மாட்டேன் னாம உன்மூலமா வாங்கி வரவச்சி அதை நீ மறந்து வீட்ல வச்சிட்டு வரவச்சி மறுநாள் ஏங்கிட்ட கொடுக்கவச்சி ஒரு உண்மையை நமக்கு தெரியவச்சிருக்கான்னா அவனுக்கும் வருப்பம் இல்லாத ஒரு தப்பை ஆண்டவனும் பண்ணி இருக்கான் அதுக்கு விமோச்சனம் தேடிக்கவே இந்தவழியை அவன் தேர்ந்தெடுத்திருக்கான்" (சித்ரஞ்சன்)

"என்னமோ உளறுறேன் னுமட்டும் தெளிவா தெரி யிது ஆனா அது என்னான் னுதான் ஒன்னும் புரியல" (ரமேஷ்)

"நீ விரும்பாத ஒன்றை உன்னிடம் இருந்து பிரிக்க தகுந்த எவிடென்ஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா கெடைச் சிடுச்சி". (சித்ரஞ்சன்)

"அப்படியா வெரிகுட் என்ன எவிடென்ஸ் அது?" (ரமேஷ்)

"அதை நான் சொன்னா நீ தாங்க மாட்டே" (சித்ரஞ்சன்)

"தாங்க முடியாத அளவுக்கு என்னவா இருக்கும்" (ரமேஷ்)

"நண்பா இப்போ நான் என்ன சொல்றேனோ அதை நீ தட்டாம செய்வேன்னு ப்ராமிஸ் பண்ணு" (சித்ரஞ்சன்)

" ப்ராமிஸ் "(ரமேஷ்)

" உங்க மனைவியோட அப்பாவை வரவழை , அதுக்கு முன்ன ஒன்னு நீ யமுனாவை விட தயாரா இருந்தா மட்டும் வரவழை இல்ல அவ எப்படி இருந்தாலும், எப்படி நடந்துக்கிட்டாலும் பரவாயில்லை காலத்தை ஓட்டுவோம்ன்னு நெனைச்சா கூப்பிடாதே நல்லா யோசிச்சி உறுதியான முடிவைச்சொல்லு ". (சித்ரஞ்சன்)

" நான் கண்டிப்பா இருக்கேன் யமுனா அப்பாவை வரவழைக்கிறேன்" (ரமேஷ்)

" இப்போ வேணாம் முதல்ல ஒரு லாயரை கன்சல்ட் பண்ணனும் அதுக்கு பலமான பாயின்ட் நம்மகிட்ட இருக்கு அதுக்கப்புரம் அவுங்க அப்பாவை வரவழைக்கலாம்" (சித்ரஞ்சன்)

"சரி என்னான்னு எனக்கு சொல்லு அதவச்சி முடிவை தீர்மானிக்க சௌகரியமா இருக்கும்" (ரமேஷ்)

"சரி என் வீட்டுக்கு வா , அதுக்கப்புரம் நீ வீட்டுக்குப்போனா அமைதியா இருக்கனும் நீ எடுக்கப்போர முடிவு
நீ எடுக்கிறதைவிட அவுங்க அப்பாவே அந்த முடிவை எடுத்தா இன்னும் நலம் தான்" (சித்ரஞ்சன்)

" கரைக்ட் "(ரமேஷ்)

" பிசியில் போட்டுக்காட்டு கிறான் யமுனா வேறு ஒருவனோடு படுக்கையில் இருக்கும் சம்பவம் அது என்பதை தெரிந்து உடனே அவுங்க அப்பாவுக்கு போன் போட்டு சித்ரஞ்சன் வீட்டுக்கு வரவழைத்து காட்டினார்கள் அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்"

" இதற்கு மேல் உங்கள் முடிவே என் முடிவு அதை கொஞ்சம் விரைந்து செயல் படுத்தினால் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது ட்ரை டு அண்டர்ஸ்டேண்ட் அங்கிள் இப்போ நான் என் வீட்டுக்கு பொகும் போது அவள் என் கண்ணில் படக்கூடாது இதில் உங்க ரிலேஷனுக்கோ இல்லை எங்க ரிலேஷனுக்கோ பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்க
இது சம்மந்தமான விஷயம் எனக்கு தெரிந்து விட்தென்று உங்க மகளுக்குத் தெரியாது இப்படிப்பட்ட உங்களுக்கு இப்படி ஒரு பெண்ணா என நினைக்கிற போது வருத்தமாக இருக்கிறதுதான் தப்பு தப்பா செஞ்சா திருத்திக்கலாம், தவரானவங்கள சொல்லி மாத்திக்கலாம் இப்படிநம்பிக்கை துரோகம் வேணுமுன்னு துரோகம் பண்றவங்களை என்ன பண்ணலாம் எங்க குடும்பம் கௌரவமான குடும்பம் உங்க குடும்பமும் எனக்குத்தெரிந்தவரை கௌரவமான குடும்பம் தான் இதனால் இருதறப்பினரையும் காத்துக்கொள்ளும் வகையில் நான் பார்த்துக்கொண்டேன் அதையே உங்களிடமும் நான் எதிர்பார்க்கிறேன்" (ரமேஷ்)

" யமுனாவின் தந்தை வீட்டுக்குப் போய் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் உட்கார்ந் திருக்கும் போது லைட்டா நெஞ்சு வலி மனைவிக்கு தெரிய ஆஸ்பத்திரியில் அட்மிட்"

"யமுனாவுக்கு போன்பண்ணி விஷயத்தை சொல்லி வரவை"

"யமுனா ரமேஷ்க்கு கூட சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டு விட்டாள்"

"அப்பா யமுனாவை அருகில் அழைத்து என்னம்மா எப்படி இருக்கிறே"

"எனக்கென்னப்பா நான் சந்தோஷமா இருக் கேன்பா"

"நிஜமாகவா"

"நிஜமாத்தான்பா"

"கொண்டவனுக்கு தரோகம் பண்ணி கண்டவன் கூட கும்மாளம் அடிச்சா சந்தோ ஷமாத்தான் இருக்கும்"

"அப்பா ஒரு அப்பா பேசுறமாதிரி பேசுங்கப்பா"

"உன்னை பெத்துக் கிட்டதுக்கு ஏன்தான் பெத்துக்கிட்டோமோன்னு இப்ப வெக்கப்படுறேன்"

" அப்பா யார் சொன்னது நீங்க எதவச்சி இப்படி பேசுறீங்க நீங்க சொல்றதுக் கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு "

" ஆதாரமா உன் மனசாட் சியே தாண்டி அதுக்கு ஆதாரம் எதோ உன் மன சாட்சிய தொட்டு சொல்லு இது அபாண்டமுன்னு "

"எதையும் ஆதாரத்தோட கேக்கனும் இப்படி சந்தேகத் தையெல்லாம் ஆதாரமா வச்சிக்கிட்டு இப்படி உயிரை வாங்கக்கூடாது"

"மறுபடியும் சொல்றேன் நீ பெத்தவங்களுக்கு பயப்படவில்லைன்னு தெரிஞ்சிப்போச்சி, உனக்கு தாலி கட்டினவனுக்கும் நீ பயப்படலன்னு திட்ட வட்டமா தெரிஞ்சிப்போச்சி, ஆனால் உன்னுடை மன சாட்சிக்கு நீ பயப்பட லேன்னா அது உன்னை குழி தோண்டி புதைச்சாலும் புதைச்சிடும்"

"அப்பா உங்கபேருக்கு கொரியர் வந்திருக்கு"

"யமுனா அதை வாங்கி படிச்சிப் பார்த்து உன் மனசாட்சிக்கு பயந்து என்ன செய்யனுமோ அதை செய்"

"ரமேஷ்கிட்ட இருந்து விவாகரத்து நோட்டீஸ்"

"அதில் கையெழுத்து போடனுமா வேணாமான்னு உன் மனசாட்சி சொல்லு கிறபடி செய் இல்ல நிராக ரிக்கனுமா உன் வாழ்க்கை அதை நீயே தான் முடிவு பண்ணனும்"

( நம்ம விஷயம் தெரிந்து விட்டது போல் தெரிகிறது அதுதான் எப்படி என்று தெரியவில்லையே ஏதாவது பிடிமானம் இல்லாமலா இப்படி நடக்கும் நாம எதிர்த்து போராட நெனைச்சி மானம் கப்பலே ரிட்டா பேசாம தலையை தொங்க போட்டுக் கிறது தான் சரி என்று மனதுக்குள் பேசிக்கொண்டு அந்த காகிதத்தில் கையெ ழுத்திட்டு அனப்பிவிட்டாள் யமுனா)

"அப்பா கேட்கிறார் யாருமா அந்த ஆள் "

"காலேஜ் பிரண்டு"

"பிரண்டா காதலனா"

"காதலன்"

"இதை கல்யாணத்துக்கு முன்னமே ஏன் சொல்லல"

"அவன் ஒரு இஸ்லாமியன் அதுக்கு நீங்க சம்மதிக்க மாட்டீங்கன்னு பயந்துகிட்டு சொல்லவில்லை"

"பொய் அவன் பலகோடி களுக்கு அதிபதியின் மகன் அவுங்க வீட்ல உன்னை ஏத்துக்கிற மாதிரி அவுங்க இல்ல இதுதான் உண்மை நீ எச்சைப் பொருக்கி நாய் விதவிதமான ஹோட்டல் விதவிதமான தீணி இதுக்கெல்லாம் கூலியா அவன் உன்னையே யூஸ்பண்ணிக்கிட்டான் அவங்கிட்ட திண்ணு திண்ணு ரூடியா யிட அதே தீணி போன எடத்தில கெடைக்கல அதனால எப்பெப்போ தேவையோ அப்பப்ப தாலி கட்டினவன் வீட்டில் இல்லாத நேரத்தில அவனை கூப்பிட்டு இப்போ உன் வாழ்கையை தோலை ச்சிட்டு அந்தராசியா நின்னு தேடுறே தேடுத்தேடு•••
இன்னொன்னு தெரியிமா அவனும் இப்போ உயிரோட இல்லை முந்தானாலு ரயிலில் அவனும் பயணம் செஞ்சிருக்கான் குண்டு வெடிப்பில்•••அவனும் காலி
இப்போ உன் கதி என்ன?
யானை சாவ ஆறு மாசத் துக்கு முன்னாலேயே தானா தன் மேலே மண்ணை வாரி வாரி போட்டுக் கொள் ளுமாம் நல்லவேளை அந்த பையன் நீ ச்சீ நான் ச்சீன்னு இல்லாம, அக்கம்பக்கம் சிரிக்காம, தெரு சிரிக்காம, ஊர் சிரிக்காம, கோர்ட்டு கச்சேரி சிரிக்காம, இந்த நாடு சிரிக்காம மறைச்சி வச்சி செஞ்சிருக்கான்னா அவன் நல்லவங்க வயித்துல பொறந்ததுக்கான அடை யாளம். போ என்கண் ணெதிரே நிக்காதே எங் கேயாச்சும் போய் செத் துப்போ தோன்றினால் புகழோடு தோன்று அப்படி இல் லேன்னா தோன்றாமல் இருக்கிறதே மேல் என்று. சொல்லி வச்சவன் செத்து போயிட்டான் அவன் சொன்ன சொல் இன்னைக் கும் உயிரோடத்தான் இருக்கு."
•••••••
Abraham Vailankanni Mumbai

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (13-Aug-16, 9:35 pm)
பார்வை : 421

மேலே