காதலை தேடி-13
![](https://eluthu.com/images/loading.gif)
காதலை(லே) தேடி-13
கடலாக நீ இருந்தால்
காதல் துடுப்பாக நான் இருப்பேன்....
கரை சேர்ந்து உன்னை
கடப்பதற்கு அல்ல,
உன் இதய கூட்டிற்குள் சேர்ந்து
காதலில் கலப்பதற்கு..........
பூவாக நீ இருந்தால்,
நிலவாக நான் இருப்பேன்.....
எட்ட நின்று உன்னை
பிரிவதற்கு அல்ல,
நீ மலரும்வேளையில்
தென்றல் தந்து உன்னை
காதலோடு அணைப்பதற்கு.....
எதுவாக நீ இருந்தாலும்
உன் துணையாக நான் இருப்பேன்,
கைத்தொடும் தூரத்திலே
உன்னை அடைவதற்கல்ல,
என் நிழல்படா தூரத்திலே
உன் நினைவுகளை ரசிப்பதற்கு.....
சகி என்னிடம் வந்த அன்றைய நாளிலிருந்து எனக்கு சந்தோஷத்தில் கை கால் புரியாமல் பறந்து கொண்டிருந்தேன்....ஆனால் சகியோ எந்த சலனமும் இல்லாமல், வழக்கம்போல அவள் வேலைகளில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் இருப்பாள்....சகிக்கு புத்தகம் படிப்பத்தில் அலாதி பிரியம், அதே மாதிரி ஏதாவதொரு கைவேலைப்பாட்டை செய்து கொண்டே இருப்பாள்....ஒரு நாள் கூடை பின்னுகிறேன் என்று அந்த நாள் முழுதும் சாப்பிட கூட நினைவு வராமல் கூடையை கட்டிக்கொண்டு அழுவாள்...
அடுத்த நாளோ டிராயிங் செய்கிறேன் என்று பைண்டும் ப்ரெஷுமாக அறைக்குள் தன்னை பூட்டிக்கொண்டு அவள் அணிந்த துணிக்கும் சேர்த்தே வண்ணம் தீட்டிக்கொண்டிருப்பாள்.....
சின்ன பெண், கொஞ்சம் கொஞ்சமாக தான் சரிக்கட்ட முடியும் என்று விட்டுவிட்டேன், அம்மாவும் இதையே எண்ணியதால், அவளை ஒருவார்த்தை கூட கடுமையாக பேசமாட்டாள்....நாட்கள் அனைவருக்கும் இனிமையாக சென்றது, ஆனால் என் இளமைக்கோ கொஞ்சம் கடினமாக தான் இருந்தது, இன்று மலர்ந்த மலராக இருக்கும் என் சகியை தொட்டு அணைக்க முடியாமல் என் கைகள் பரபரத்து கொண்டே இருக்க, நானோ ஏக்கத்தில் அவளையே சுற்றி சுற்றி வந்தேன்.......
எல்லாத்தையும் யோசித்து வக்கனையாக விலாவரியாக பிரித்து மேயும் என் மனையாழினி இல்லறம் எனும் தாம்பத்தியத்தில் மட்டும் முழுக்க முழுக்க பூஜ்யம்.......நான் கிட்ட போனாலே எட்டு மைல் தூரத்துக்கு ஓடி விடுவாள்.......நிக்க வைத்து கேள்வி கேட்டால் "இன்னும் நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரலைல, அதான் உங்ககிட்ட பேச கொஞ்சம் தயக்கமா இருக்குனு" எதோ ஒரு சாமாளிப்பை என் காதில் திணித்துவிட்டு மறுபடியும் எஸ்கேப் ஆகிவிடுவாள்......இப்படியே இரண்டு மாதங்கள் ஒலிம்பிக்கில் பரிசுவாங்க ஓடுவதைப்போல ஓடியே போய்விட்டது........
அவளை எப்படி இம்ப்ரெஸ் செய்வது என்று தினம் தினம் ஆயிரம் திட்டம் திட்டினாலும் எல்லாமும் பிளாப் ஆகிவிடும், அதெற்க்கெல்லாம் காரணமும் என்னவளாய் தான் இருப்பாள்......
அப்படி தான் இந்த முறையும் நான் போட்ட திட்டத்தை திறமையாக செயல்படுத்த தொடங்கினேன்.......எங்கே இதையும் பிளாப் ஆக்கிவிடுவாளோ என் இனியவள் என்ற பயத்தோடு.......
அம்மா நீங்க ரொம்ப நாளா திருவேற்காடு அம்மன் கோயிலுக்கு போகணும்னு சொல்லிட்டு இருந்திங்கள்ல, என் பிரண்ட் பேமிலி நாளைக்கு அங்க தான் போறாங்களாம், இன்னும் நாலஞ்சு கோவிலுக்கும் போக போறாங்களாம், என்கிட்டே சொன்னான், நீங்களும் போகணும்னு சொல்லிட்டு இருந்தது ஞாபகம் வந்தது, அதான் என் அம்மாவும் அப்பாவும் வருவாங்கனு உங்களுக்கும் சேர்த்து அரேன்ஜ்மென்ட்ஸ் பண்ண சொல்லிட்டேன்....நீங்களும் அப்பாவும் நாளைக்கு காலைல நேரமா ரெடி ஆனா போதும், வேன் நம்ப வீட்டுக்கே வந்து உங்களை பிக்கப் பண்ணிக்கும்.......மூச்சு விடாமல் ஒருமுளம் நீளத்துக்கு பேசிமுடித்தேன்....
"டேய் தம்பி, ஒரு நிமிஷம்....எப்போ நான் திருவேற்காடு போகணும்னு சொன்னேன், அப்படி சொன்ன மாதிரி எனக்கு ஞாபகமே இல்லையே......"
"என்னம்மா நீங்க, வயசானா ஞாபக மறதி அதிகமாகும்னு சொல்வாங்க, ஆனா என் பியூட்டி அம்மாவுக்கே ஞாபக மறதி வந்துடுச்சா? நீங்க தாம்மா அடிக்கடி சொல்லிட்டே இருப்பீங்க, இப்போ மறந்துட்டீங்களே........இப்போ நான் என்ன பண்றது?, என் பிரெண்ட்கிட்ட வேற சொல்லிட்டேன், அவனும் அரேஞ் பண்ணிருப்பான், இப்போ கான்செல் பண்ணிடுன்னு சொன்னா சங்கடப்படுவான்......சரி பரவாயில்ல, நான் சொல்லிக்கிறேன்மா .... கொஞ்சம் பாவமாக முகபாவனை செய்துகொண்டு பில்டப் கொடுத்தேன்.....
" சரி விடுடா, நான் ஞாபகம் இல்லனு தானே சொன்னேன், போகமாட்டேனா சொன்னேன், கோவிலுக்கு போய் சாமிய தரிசனம் பண்ண கசக்கவா போகுது, அதுவும் எல்லா அரேன்ஜ்மென்ட்டும் நீ பண்ணி வச்சிருக்கல்ல, நாங்க கண்டிப்பா போறோம்டா, ஆனா"
"ஆனா என்னம்மா ?"
"சகியையும் உன்னையும் தனியா விட்டுட்டு எப்படி போகறதுனு தான் யோசனையா இருக்கு"
"சகி எங்கம்மா தனியா இருக்க போறா, அதான் கூட நான் இருக்க போறேன்ல" கண்களில் காதல் பொங்க நான் கூறிக்கொண்டிருக்க...
"நீயே வேலைக்கு போனா, வீடு வந்து சேரணும்னு நினைப்பு இல்லாம வேலை செய்வ, நீ எங்கடா அவளை பாத்துக்க போற"
"அம்மா நான் தான் ரெண்டு நாளைக்கு லீவ் போட்ருக்கேனே...."
"லீவ் போட்ருக்கியா, எதுக்குடா? நீயும் சகியும்கூட எங்களோட கோவிலுக்கு வர போறிங்களா???"
(ஹய்யையோ அம்மா நம்ப பிளானையே மாத்திடுவாங்க போல இருக்கே) "அம்மா, எனக்கு ஆஃபீஸ் ஒர்க் நிறைய இருக்கு, இப்போ ஆபிஸ்ல என் ரூம்ல மைண்ட்டனிங் ப்ராசெஸ் போய்க்கிட்டு இருக்கு, இப்போ அங்க என்னால ஒர்க் பண்ண முடியாது,அதனால நான் வீட்ல இருந்தே லேப்டாப்ல ஒர்க் பண்ணப்போறேன், சோ லீவும் இல்ல, அதே நேரத்துல ஆபிஸுக்கும் போக போறது இல்ல, சகியும் தனியா இருக்க மாட்டா" ஒரு வழியாக சமாளித்து முடித்தேன்....
"சரிப்பா, அப்போ சரி, நீ சகிய நல்லா பாத்துக்கோப்பா, எதாவது ஒரு வேலைய கைல எடுத்தா சாப்பாட கூட மறந்துட்டு வேலை பார்ப்பா அப்படியே உன்ன மாதிரி........இன்னும் சின்ன பொண்ணு மாதிரியே இருக்காப்பா......"
(அம்மாவை நினைத்தால் இந்த நேரத்தில் நான் பெருமையாக உணர்கிறேன், பிடிக்காத மருமகளாக வந்தவளை இன்று மகளாக தாங்கும் அம்மா கிடைத்ததில் எனக்கு எக்கச்சக்க பெருமை, இருந்தாலும் இதே அம்மா தான் ஒரு காலத்தில் நாங்கள் பிரிவதற்கு காரணமாக இருக்க போகிறாள் என்று வெள்ளந்தியா சிரிக்கும் அவளுக்குமே தெரிய போவதில்லை........
"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்மா, போய் உங்க டிரஸ் எல்லாத்தையும் பாக் பண்ணுங்கமா, நாளைக்கு சீக்கிரம் போகணும்ல"
"சரிப்பா, நாங்க போய் எல்லாத்தையும் எடுத்து வைக்கறோம்,நீ போய் சாப்டுட்டு படு.....சகியையும் சாப்பிட சொல்லு" என்று என்னிடம் கூறிவிட்டு
"என்னங்க வேடிக்கை பார்த்துட்டே நிக்கறீங்க, அதான் அவன் இவ்ளோ தூரம் சொல்றான்ல, வாங்க, எல்லாத்தையும் எடுத்துவைக்கலாம், உங்களுக்கு எண்ணலாம் எடுத்து வைக்கணும்னு சொல்லுங்க, அப்புறம் அங்க போனதும் அது இல்லை, இது இல்லனு என்கிட்ட கோவப்படக்கூடாது"என்று சொன்ன கையோடு பாக் செய்ய ரூமுக்கு சென்றுவிட்டார்....
"அதுவரை என்னை ஏற இறங்க பார்த்து கொண்டிருந்த அப்பா,இப்பொழுது என் அருகில் வந்து, "ஏண்டா மகனே, உன் போதைக்கு நாங்க ஊறுகாயா? இதெல்லாம் உனக்கே அநியாயமா இல்லையாடா "என் திட்டத்தை புரிந்துகொண்டு அப்பா கேட்க,
" அப்பா தேங்கா சாப்பிடணும்னா மரத்துல ஏறிதானே ஆகணும்,இதெல்லாம் உங்களுக்கு தெரியாததா என்று அவரின் கடந்த காலத்தை நினைவுபடுத்த, "ம்ம்ம்.....நல்லா என்ஜாய் பண்ணுடா" என்று ஒரே வார்த்தையில் வாழ்த்திவிட்டு ரூமுக்கு போய்விட்டார்.....
அப்பா போனதையே பார்த்தபடி நின்றிருந்த எனக்கோ ஒரே குஷி, நினைத்தபடி முதல் கட்டத்தில் வெற்றி, இனி எப்படியாவது சகியை இம்ப்ரெஸ் செய்து அவள் மனதில் எனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டியது தான் பாக்கி......
கனவுகளோடு என் காதல் கடலில் பயணிக்க தொடங்கினேன்..........