முத்துவிற்கு அஞ்சலி
யாழின் நாதம் நின்று விட்டது
அழகின் அழகு மறைந்து விட்டது
மின்சாரக் கம்பி மைனாவை மின்சாரம் தாக்கியது
முத்தாய் எழுதிய கை ஓய்ந்து விட்டது
கவிதையின் சிங்காரம் அழிந்து விட்டது
படைப்பின் பள்ளி மூடப்பட்டது
எளிமைத் தமிழ் காணமல் போனது
சட்டென எழுதும் பேனாமை தீர்ந்து விட்டது
முதுகலைப் பட்டம் வாங்கி முதுமை பாராமல் போய் விட்டது
பட்டாம்பூச்சி போல் பறந்து விட்டாயே
நீ மட்டும் தனியாகப் பறக்கவா
எங்கே காண்பது உன்னை
வானவெளியிலா
அல்ல உன்னெழுத்துக்களில் தான்