குருதியால் விளைந்ததன்றோ
எத்தனை அடிகளம்மா!!
எத்தனை உதைகளம்மா!!
எண்ணிட துடிக்குதெந்தன்
உள்ளமும் பதைக்குதம்மா!!
உத்தமரண்ணல் தம்மின்
உன்னத உரைக்கன்றி
மற்றவைக்கு மயங்கார், மறவரை
பெற்றதால் பெருமை பெற்றோம்!!
எண்ணிட பதைக்குதெங்கள்
முன்னவர் செய்த தியாகம்!!
மண்ணிடத்தவர்கிருந்த மாசிலா
பற்றினாலே உன்னத செயல்கள் செய்தார்
உயிரையும் உவந்தளித்தார்!!!
கண்டிலர் யாருமிதுபோல்
கடுந்தவக்காட்சியெல்லாம்
கொண்டிலர் யாருமெங்கள்
பெருமையை ஒத்தவொன்றை!!
அண்டினர் உதவியென்றே
மண்டிய செல்வம் கண்டார்
மமதை பெருக்குற்றார்!!
நட்பெலாம் மறந்து நம்நாட்டை
தமதாக்கவெண்ணி நாய் செயல் செய்யலானார்!!
பொருப்பரோ இளையோர் கூட்டம் !
தம் தலைதனை விலையாய் சொன்னார்!!
விடுதலை விதைக்கு நீராய்
இரைத்தனர் குருதிதன்னை
கருத்திலே மாற்றமில்லார்
தம் திறத்தினால் செய்தவத்தினால் விளைந்ததன்றோ!!