ஓராயிரம் மலர்த்தூவி
பாடென்று பகர்ந்தாலே இனிய குயில்
பாடிடுமோ இசையாக பாடும் குயில்
ஆடென்று ஆணையிட்ட பின்னால் தான்
ஆடித்தான் மகிழ்ந்திடுமோ அழகு மயில்
ஓடென்று உரைத்தாலே கொம்பு மான்கள்
ஓடிடுமோ துள்ளித்தான் காட்டி னிலே !
நாடென்ன செய்த்து என்றே எண்ணி
நாமிருக்க லாமோ பொது நலமின்றி !
காடுகமழ் சந்தனத்து வாசமும் தான்
கடவுசீட்டு பெற்றேதான் கமழ் கிறதோ!
ஏடெடுத்தே எழுதுகையில் கம்பரும் தான்
எவரிடமும் அனுமதி பெற்ற தில்லை
வாடிடுவோம் என்றேதான் எண்ணி டாமல்
வருந்தியே மலர்ந்திடுமோ மலர்க ளெலாம்!
ஆடியசை யாதென்று சொல்லி விட்டால்
ஆடுவதை நிறுத்திடுமோ வேழமும் தான் !
ஒளியைத்தான் நமக்கெலாம் வழங்கு தற்கு
ஓர்நாளும் ஆதவனும் மறுத்த தில்லை
களிப்புமிகு காதலர்கள்தாம் மகிழ்ச்சி யுற
கவின்நிலவு கேட்டுத்தான் பொழிந்தி டுமோ
வளியும்தான் தென்றலாகி வீசூம் போது
வந்திடவா ? என்றுதான் கேட்ட துண்டா?
ஒடிசலுடல் காந்திதாத்தா சிலைக்கு தானே
ஓராயிரம் மலர்தூவி வணங்கிடு வோமே!
கே. அசோகன்