எங்கள் சுதந்திரம்
உதிரம் வடியப் பெற்ற சுதந்திரம்
உயிர் விட்டு பெற்ற சுதந்திரம்
விதியை வென்று பெற்ற சுதந்திரம்
வேள்வி புரட்சி செய்த சுதந்திரம்
மதியற்றுக் கிடந்த சிற்றரசர் கள்மனதை
மேலைநாட்டு வாசனை திரவியத்தால் அவன்
சதிசெயது அடிமை ஆக்கினான் ;காந்தி
சத்தியத்தில் வாய்த்த வாய்மை சுதந்திரமே
இந்தியனே ! இந்திய நாடிது என்றும்
என்னுடைய நாடே என்று முழங்கு
அந்நிய மறவன் நம்மை ஆள
அடிமை வாழ்வு போனது மாள
வந்தவர் போனவர் யாரையும் நம்பி
வாடின காலங்கள் ஓடின தம்பி
இந்ததினம் முதல்'இந்திய நாடிது
என்னுடைய நாடே'ன்ற எண்ணத்தை கூடு