நண்பன்
வலி என்றால் துடிப்பவன்
தவறென்றால் அடிப்பவன்
வாகை என்றால் அணைப்பவன்
அழுகை என்றால் துடைப்பவன்
அடுத்த கண்ணீர் விடுபவன்
அதை மறைத்து
என் வலியை அழிப்பவன்
தாயானவன்
என் நண்பன்
கவியின் செல்வன்
நா. முத்துக்குமார் ஐயா
அவர்களுக்கு சமர்பிக்கிறேன்
நீங்கள்
இல்லை என்று சொல்லமாட்டேன்
இருக்கிறீர்கள்
ஆனால் எங்கிருக்கிறீர்கள்
என்று தான் தெரியவில்லை
அந்த காற்றை போலே
காற்று எப்படி
உயிருக்கு சுவாசமாகுமோ
அதே போல்
தான் நீங்களும் எங்களுக்கு
காற்றின் உருவம்
அறிய முடியாது
ஆனால் உணர முடியும்
தங்களின்
கவியில்
தங்களை காண்கிறேன்
என்றும் என்றென்றும்
இறையே
அருள்வாய்
எங்கும் நின் சுவடு
அந்த சுவடெனும் படகில்
பயணிக்கும்
யாவரும்
இன்று தத்தளிக்கிறோம்
படகே
கரைசேர்த்துவிடு
உடன் இருந்து
உங்களின் உறவெனும்
உயிர்களை
படகை நம்பித் தான் பயணம்
நித்தம் அலை வந்து அடிக்கும்
கலங்காமல் முன்னேறு
முன்னேறு
கண்ணீர் துளியில்
கவி எழுதி
வானில் பறக்கவிட
காற்றில் கலையக் கண்டேன்
கலைந்து போன
மேகத்தை திரட்டி
கவிமழை படைக்க
கண்ணீராய் போகக் கண்டேன்
மண் மேலே
புல்வெளி விரிக்க
படுக்க
படுக்கை இன்று
பாதாளமாய் மாறக் கண்டேன்
நீர் இன்று
நீரின்றி
கானலாய் ஓடக் கண்டேன்
மௌனம் இன்று கதறலாய்
ஒலிக்கிறது
ஒளி இன்று
கூசுகிறது
மழை கூட
வானின் கண்ணீராய்
தெரிகிறது
பூ இன்று
பிறந்து
மடிய
எனை ஏன்
ரசிக்க வைத்தது
அழ கூட
முடியவில்லை
காரணம்
கண்களும்
போதவில்லை
மனதின் வலியை
சொல்ல வார்த்தையில்லை
எங்கே சென்று தேடிப் பிடிப்பேன்
என்றே நாளும் நகருமா
நாளை நீயும்
புதிதாய்
வந்திடு
என்றே நாவும்
சொல்லுதே
நடக்குமா அது.....
~ பிரபாவதி வீரமுத்து