புழுதியும் பிதற்றலுமாக
பெண்ணின் மனதை
அறியாதவன்
தன பெருமை பேசி
அலசுகிறான்
தான் செல்வந்தன்
என்றும்
செல்வாக்கு நிறைந்தவன்
என்றும்
வாய் ஓயாமல்
அள்ளி விடுகிறான்
புழுதியும் பிதற்றலுமாக.
பெண்ணோ நிலை குலைந்து
புலம்புகிறாள் தன்
நிலை வருந்தி
மணவறையில் அமர வேண்டியவள்
துடித்துக் கதறுகிறாள்
பொருட்படுத்தாது பொய்யை
உண்மையாக்கி நிலை
நாட்டுகிறான்
அவனுக்குத் துணையாக
அவன் தமக்கையும்
தமையனும் வாதாட
அதிர்ந்து நிற்கிறார்கள்
கூடினவர்கள்.