கனவு நாயகி
உன் கனவு ஸ்பரிசம்
என் முதல் விடியல்
உன் உதடு முத்தம்
என் மறு ஜென்மம்
உன் கனவு தரிசனம்
என் முதல் கடவுள் வழிபாடு
உன் குரலோசை
என் கிராமபோன்
உன் கை வளையல் ஓசை
என் காலை சுப்ரபாரதம்
உன் கொலுசோசை
என் நடப்பு கவிதை
என் கனவு நாயகியே
நீ எங்கே !