நீ என்னை வெறுக்கும் ஒவ்வொருநாளும் 555

என்னவளே...

தினம் தினம் நான் ரசிக்கும்
வான்நிலாவிடம் கேட்பதில்லை...

வளர்ந்து மறைவதை
எதனால் என்று...

நீ என்னை எவ்வளவு
வெறுத்து ஒதுக்கினாலும்...

நான் உன்னிடம்
கேட்கப்போவதில்லை...

என்னை ஏன்
வெறுக்கிறாய் என்று...

வான் நிலா பௌர்ணமியாய்
ஜொலிப்பதுபோல்...

நீயும் என் வாழ்வில் என்னுடன்
சேர்ந்தே பிரகாசிப்பாய்...

நம்புகிறேனடி நீ என்னை
வெறுக்கும் ஒவ்வொரு நாளும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Aug-16, 7:58 pm)
பார்வை : 93

மேலே