மெட்டுக்கு பாட்டு

(இது ஆவாரம் பூ படத்தில "சாமிகிட்ட சொல்லிவச்சு" மெட்டுக்கு என்னுடைய வரிகள்) "எப்படி இருக்கு தோழர்களே"

பல்லவி :

சொர்க்கத்துல பூத்திருந்தது
சொந்தமுன்னு வந்த மலரே
வாழும் இந்த பூமியில
சேர்ந்திருக்கும் எந்தன் உயிரே
அன்பின் மொழியே
அன்னைமடியே
இன்பங்களை கூட்டிவந்து
பக்கம் நிற்கும் அற்புதமே


சரணம் 1:

ஆகாயம் அது ...!
தேன் தூறும் என்னில்.....!
உன் நினைவுகளில் நாளும் .....!
ஆதாரம் இனி .....!
உன் இதயமென்று.....!
என் ஜீவன் அதில் வாழும்.....!
நாள்தோறும் எண்ணில் பூத்த பூவே.....!
நீ வாடா மனம் நோகும் .....!
வாழ்நாளில் உன்னை சேர்ந்தேன் நானே....!
தேவன் தந்த யோகம்.....!
வந்த வரமே....! நெஞ்ச சுகமே......!
அன்பு என்னும் வானத்திலே ......!
வந்து நின்ன வனவில்லே .....!

சரணம் 2:

மார்போடு முகம் ......!
நான் சாய்த்து தினம் .....!
பூலோகம் மறந்தேனே....!
நாம் வாழும்வரை .....!
நான் தினம் உனக்கு ....!
தாயாக இருப்பேனே .....!
நீ மட்டும் இங்கு இல்லை என்றால்
என் வானில் பகல் ஏது.....!
நீர் பொங்கும் அந்த ஓடை போலே
என் அன்பு குறையாது .....!
எந்தன் சொந்தமே.....! தெய்வ பந்தமே.....!
சொர்க்கத்துல சொல்லிவச்சு
வாங்கி வந்த சித்திரமே ......!

எழுதியவர் : பாக்யா (15-Aug-16, 9:32 pm)
Tanglish : mettukku paattu
பார்வை : 286

மேலே