என்னவளே உணர்வாய்
என் நினைவில் இருந்து
என்றும் நீங்காத ஒரு வரம் கொடு
என்னவளே
எனை விட்டு
எங்கும் ஓடாதே நம்
எதிர் கால காதல் மண வாழ்க்கையை
என் இயத்தில் சுமக்கிறேன் சுமை கொண்ட
என் இதயம் சுகம் பெறுமா உனை விரும்புகிறேன்
என்னவனே நானும் என நீ சொல்லும்
அந்த ஒரு வார்த்தையில் .....
உனை பற்றி பேசாத நாள் ஒன்று
உண்டு என்றால் அன்று என்
உயிர் பிரிந்து இருக்கும் என் வாழ்நாளின் கடைசி நாள் என்றும்
உணர்வாய் பெண்ணே .....
உன் தெரு சிறிது என்றாலும்
உனை காணாத என் கண்கள்
உலகில் எந்த மூலையில் நீ இருக்கிறாயோ
என தேடும் என் மனம்
ஓளி கொண்ட உன் முகம் காணும் வரை ........
நீயே எனை புரிந்து வருவாய் என
நீண்டநாள் காத்திருந்தேன் வீராப்பில்
வீணாய் போனது என் வீரப்பெல்லாம்
உன் அழகை கண்டு நான் உன்னிடம்
கெஞ்சும் பொது பெண்ணே .......
அசோக வனத்தில் ராமணக்காக
காத்திருக்கும் சீதை காதை மாறி
சீதையே உனக்காக காத்திருக்கும் ராமன்
நான்
என உணர்வாய் எனை என்னவளே !