கள்

கள்

இளமையில் கல் நீ
விண்ணுக்குச் செல்ல
இளமையில் கள் நீ
மண்ணுக்குள் செல்ல

கள்
கல்லீரல் தலையில்
நீ போடும் கல்

கள்
கல்லீரலுக்கு
கல்லறை கட்ட
செயப்பட்ட கல்

மது
மயானத்தின்
மௌனவழி
அது
இடுகாட்டின் குறுக்குவழி
நேர்வழி செல்ல கட்டணமில்லை
நேரமாகும்
நேரத்தை குறைக்கவோ
கட்டணம் செலுதுகின்ரீர்

மதுவே
உன்னால் எத்தனை
குடும்பம் சவக்குழி
சென்றது தெரியுமா ?

இறைவா
மதுவின் போதையை எடு
மக்களுக்கு
மகிழ்ச்சியின் பாதையை கொடு

எழுதியவர் : குமார் (15-Aug-16, 9:30 pm)
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே