கண்டதும் காதல்

ஒரே ஒரு பார்வையாலே
என்னை ஆயுள்
கைதியாக்கியவளே...
உன்னை கண்ட
ஒரு நொடியில்
உலகையே மறந்து
போனேனடி....
சினிமாவில் பார்த்த
காதலெல்லாம்
இதுவரை எனக்கு
பொய்யாய் தான்
தெரிந்ததடி.....
நீ என்னுள்
வந்ததும்
நிழல்களும் நிஜமானதடி...
அழகே என்னோடு
நீ வாழ்வில்
பயணிக்க
எதையும் செய்ய
காத்திருக்கிறேனடி....
ஒரே ஒருமுறை
என்னை பார்த்து
சம்மதம் சொல்லுவாயா
என் கிளியே.....
உன் கண்களை
இமைத்து
உதடுகளை
கொஞ்சம் அசைத்து
சொல்லிவிடடி....

எழுதியவர் : பச்சைபனிமலர் (16-Aug-16, 9:25 am)
Tanglish : kandathum kaadhal
பார்வை : 163

மேலே