எப்போது முத்தமிடுவேன்

பள்ளியில் முத்தமிட்டேன்!
எச்சில் என்றாய்!
பருவ வயதில் முத்தமிட்டேன்!
பொறுக்கி என்றாய்!
அனுமதி வாங்கி முத்தமிட்டேன்!
போதும் என்றாய்!
திடீரென்று முத்தமிட்டேன்!
திருடன் என்றாய்!
யாருமறியா நேரத்தில் சாலையில் முத்தமிட்டேன்!
லூசு என்றாய்!
ஊரறிய என்னவளான பின் முத்தமிட்டேன்!
ஆசையா என்றாய்!
தனியறையில் முத்தமிட்டேன்!
விடுங்க என்றாய்!
பிள்ளைகளின் முன் முத்தமிட்டேன்!
போய்டு என்றாய்!
நெற்றியில் முத்தமிட்டேன்!
நேரம் இருக்கு என்றாய்!
நீ தலைகுளித்த பின் முத்தமிட்டேன்!
தள்ளி போ என்றாய்!
நெருங்கி வந்து முத்தமிட்டேன்!
இம்சை என்றாய்!
கழுத்தின் கீழ் முத்தமிட்டேன்!
கருமம் என்றாய்!
கலவி முடிந்து முத்தமிட்டேன்!
போதும் என்றாய்!
முடி நரைத்த பின் முத்தமிட்டேன்!
கிழடு என்றாய்!
உன் நிழலுக்கு முத்தமிட்டேன்!
நிம்மதி என்றாய்!

எழுதியவர் : Sherish பிரபு (16-Aug-16, 2:47 pm)
பார்வை : 910

மேலே