உன் இதழினில் நான் சிரிப்பேன்

சின்னஞ்சிறு குழந்தையாய் துள்ளி ஓடும் ஸ்ரித்திகா அந்த வீட்டின் இளவரசி .அந்த வீடு ரத்தின்னத்தின் சொந்த உழைப்பில் உருவான வீடு. ரத்தினம் ஸ்ரித்திகாவின் தந்தைவழி தாத்தா . தாய் தந்தை உடனிருந்தும் அவளது மேற்படிப்பிற்க்கான செலவையும் அவளது அனைத்து பொறுப்புகளையும் ஏற்று கொண்டார் அவள் மட்டுமே அவரது உயிர் என்ற காரணத்தினால் . ஸ்ரித்திகாவிற்கோ வளரும் பருவத்திலிருந்தே தாத்தா மட்டுமே உயிர் அவரை பார்த்து கொள்வது , அவருடன் அமர்ந்து கதைபேசுவது , தொலைக்காட்சி பார்ப்பது ,சாப்பிடுவது என எல்லாம் அவருடன்தான் .... தூங்குவது மட்டும் தாய் தந்தையிருடன். அவர் தந்த தன்னம்பிக்கையாலும் அவளது கடின உழைப்பாலும் ஒரு மென்பொருள் அலுவலகத்தில் வேலை கிடைத்து ... பணிபுரிய ஆரம்பித்து தன் முதல்மாத சம்பளத்தில் தன் தாத்தாவிற்காக வாங்கிய வேட்டி சட்டையை கொடுத்து அவரின் இதழில் தன் வெற்றிக்கான பெருமித புன்னகையை காணத்தான் ஓடுகிறாள் அவள் . அவளே ஓய்ந்தாலும் அவளை உற்சாகபடுத்தி
அவளது இன்றைய வெற்றியை அடைய செய்தவர் அவர் .

உன் இதழலினில் நான் சிரிப்பேன் தொடரும்

எழுதியவர் : சுருதி சந்திரன் (16-Aug-16, 4:08 pm)
பார்வை : 415

மேலே