காதலை தேடி-15

காதலை(லே) தேடி-15

உன் விரல்களை கடித்துவிட்டு
எச்சிலை விழுங்குகின்றேன்
இது ருசியான காயென்று....

உன் செவ்விதழ்களை உரசிவிட்டு
மயக்கம்போட்டு விழுந்துவிட்டேன்
இது தேனியை பிடிக்கும் பூவென்று.....

உன் நுனிமூக்கை கிள்ளிகொண்டு
உன் மடிமீது சாய்ந்துவிட்டேன்
இனி நான் தான் உன் முதல் சேயென்று......

சகியும் நானும் இனி இரண்டு நாட்களை தனிமையில் எங்கள் மூச்சுக்காற்று மட்டுமே உலவும் தனிமையில் கடக்க போகிறோம் என்று நினைக்கும் போதே என் காதல் நரம்புகள் யாவும் சில்லிட்டு நிற்கிறது.......

"சகி என்ன பண்ணிட்டு இருக்க?"

"பார்த்தா தெரியலையா, சோபால உக்காந்திட்டு இருக்கேன்"

"எனக்கு கண்ணு நல்லாவே தெரியும்மா, உட்கார்ந்து இருக்க.... ஓகே, கைல என்ன?"

"புக்.... புக் படிச்சிட்டு இருக்கேங்க , இதுவும் உங்களுக்கு தெரிஞ்சிருக்கணுமே, உங்களுக்கு தான் கண்ணு நல்லாவே தெரியுமே"

இத்தனை நாள் என்னை பார்த்து ஓடி ஒளிந்து கொண்ட என் சகி இன்னைக்கு என்கிட்டயே கேலி பேசறாங்களாம், வாயாடி... வாயாடி, இருந்தாலும் சகி என்னிடம் இப்படி வாயாடுவதே எனக்கு பிடித்திருக்கிறது........

"இப்போ தானே அம்மாகிட்ட சொன்ன, அதுக்குள்ளே மறந்து போச்சா"

என்ன சொன்னாள் என்று புரியாமல் புருவத்தை சுருக்கி என்னை வெறித்து பார்த்தாள்.....

"நான் சொல்றது புரியலையா, இப்போ தான் என்ன நல்லா கவனிச்சுப்பேன்னு அம்மாகிட்ட வாக்கு குடுத்த, அதுக்குள்ளே இப்படி புக்கும் கையுமா உக்காந்திட்டேயே, உன்ன போய் நம்பிகிட்டு என்ன தனியா விட்டுட்டு போய்ட்டாங்களே, அம்மா உங்க பையன் இனி உங்களுக்கில்லை, உங்க மருமக ஒருவழியா என்ன தொலைக்காம விடமாட்டா போல இருக்கே , இப்போ நான் இத யார்கிட்ட சொல்லுவேன்" என்று ஹைபிட்சில் அசத்தும்படியாய் புலம்பலை ஆரம்பித்தேன்.....

"ஷ்ஷ்ஷ்ஷ்..... எதுக்கு இப்படி புலம்பறிங்க, இப்போ உங்களுக்கு என்ன செய்யணும், சொல்லுங்க செய்யறேன்"

"ம்ம்ம், அப்படி கேளு என் செல்லக்குட்டி......."

"இந்த செல்லக்குட்டி கொஞ்சல்லாம் வேண்டாம், என்னனு சீக்கிரம் சொல்லுங்க"

அட பைத்தியமே, இதுகூட புரியலையா, என் காதல் தாபம் தீர உன் காதல் இதயம் ஒன்றே எனக்கு போதுமானது.........கண்களால் அவளை விழுங்கியபடியே வெறித்து பார்த்துக்கொண்டிருக்க

"என்ன வேணும்னு கேட்டேன்"

"எனக்கு பசிக்குது, சீக்கிரம் சாப்பிட எதாவது செய்"

"இவ்ளோ தானா, சரி நான் சீக்கிரமே சமைச்சி கொண்டு வரேன், நீங்க இந்த புக்க படிச்சிட்டு இருங்க"

இவளுக்கு எவ்ளோ கொழுப்பு பாருங்க, இந்த புக்க நான் படிக்கணுமாம் ....இவ்ளோ நேரம் என் ஆசை மனையாழினி படிச்ச புக் என்ன தெரியுமா, சமையல் செய்வது எப்படி???

இவளை நம்பி பசியோட நான் காத்திருக்கணுமா?? இருந்தாலும் காதலுக்காக எந்த சோதனையும் வென்று தானே ஆக வேண்டும்.......

"சகி சமையல் ரெடி ஆயாச்சா???....."

"இதோட பத்து தடவை கேட்டுடீங்க, சமையல் செய்ய வந்து அஞ்சு நிமிஷம் தானே ஆகுது"

"சமையல்னா சீக்கிரம் செய்ய வேண்டாமா, நீ இவ்ளோ லேட் பண்றயேமா"

"சீக்கிரமா செய்யணும்னா நூடுல்ஸ் தான் செய்ய முடியும், வேணும்னா பத்து பாக்கெட் போட்டு கிண்டி தரட்டுமா"

"அம்மா தாயே விட்டா என்ன களி தின்ன வச்சிடுவ போலயே, லேட் ஆனாலும் பரவால்ல வாயில வெக்கறமாதிரி நல்லா சமைச்சி கொண்டு வா, அது போதும்"

"ம்ம்ம்.......அப்படி போய் உட்காருங்க, சமையல் ரெடியானதும் சொல்றேன்"

"என்னடி, பிச்சைக்காரன விரட்ட மாதிரி தொரத்தர"......பேசிக்கொண்டிருக்கும்போதே கால் வர "உன்ன அப்புறமா பேசிக்கிறேன்" என்று கொஞ்சம் பில்டப் கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன்........

"என்ன பண்ணிட்டு இருக்கீங்க, சமைச்சி வச்சு அரைமணி நேரம் ஆகுது, அப்படி என்ன போன் காலோ......சீக்கிரம் வாங்க, எனக்கும் பசிக்குது"

சகியின் குரல் கேட்க, "சார் உங்ககிட்ட அப்புறமா பேசறேன், பை" என்று போனை கட் செய்துவிட்டு சகியிடம் வந்தேன்.......

"என்ன சகி, சமையல் ரெடி ஆச்சா?"

"சமையல் ரெடி ஆகி ரெண்டு மணி நேரம் ஆச்சு"

"உன் மாமன் ரெடி ஆகிகூட தான் ரெண்டு மாசம் ஆச்சு"

"என்ன சினிமா டயலாக்கா? சீக்கிரம் கை கழிவிட்டு வாங்க, எனக்கு பசிக்குது"

கைக்கழிவி விட்டு சாப்பிட அமர்கையில் என் மூலையில் பல்ப் எரிந்தது........

"ஷ்ஷ்ஷ்ஷ்........"

"என்ன ஆச்சுங்க?"

"இவ்ளோ நேரம் போன் பேசிட்டு இருந்தேன்ல, என் கை பிடிச்சிக்கிச்சு, ரொம்ப பெயின்னா இருக்குமா.........என்னால சாப்பிட முடியாது, நீ சாப்பிடு"

"இப்போ தான் ரொம்ப பசியா இருக்குனு சொன்னிங்க, கைல சாப்பிட முடியாட்டி என்ன, என்கிட்ட வேற ஒரு ஐடியா இருக்கு"

"ஆஹா, என் ஆசை பழிச்சிடுச்சோ"

"டொண்டடொயின்"

"என்னடி இது"

"பார்த்தா தெரியல , ஸ்பூன்.......... கை வலிக்குதுன்னு சொன்னீங்கள்ள, இந்தாங்க ஸ்பூன்ல சாப்பிடுங்க"

"அடியே அறிவாளி, கையே வலிக்குதுன்னு சொல்லிட்டேன், ஸ்பூனை பிடிச்சி சாப்பிடவும் கை தான் வேணும், தெரியும்ல"

"ஆமால்ல, ஆனா'

"நிறுத்து, இப்போ என்ன என் லெஃப்ட் ஹாண்ட்ல சாப்பிட சொல்லுவியே"

"ஆமாங்க, எப்படி கண்டுபிடிச்சீங்க"

"நீ தான் அறிவாளின்னு எனக்கு எப்பயோ தெரியுமே, ஆனா எனக்கு லெஃப்ட் ஹாண்ட்ல சாப்பிட வராது, அது மட்டும் இல்லமா கைல சாப்பிட தான் எனக்கு பிடிக்கும், இந்நேரம் என் அம்மா இருந்தா எனக்கு ஊட்டிவிட்ருப்பாங்க, ஹ்ம்ம்ம் என்ன செய்ய, எல்லாரும் அம்மா மாதிரி வருவாங்களா......அம்மா என்ன தனியா தவிக்க விட்டுட்டு நீங்க மட்டும் ஜாலியா கோவிலுக்கு போய்ட்டீங்களே, இப்போ பாருங்க இவ என்ன பட்னி போட்றா"

"ஹையோ மறுபடியும் புலம்ப ஆரம்பிச்சிடீங்களா, இப்போ என்ன உங்களுக்கு கை வலி, நான் ஊட்டி விடணும் அவ்ளோ தானே"

"ஏய் நான் உன்ன ஊட்டிவிட சொல்லல, நீபாட்டுக்கு தப்பா கற்பனை பண்ணிக்காத"

"சரி நீங்க சொல்லல, நானாவே ஊட்டிவிடறேன், நீங்க சாப்பிடுங்க"

"லேடீஸ் பிங்கர் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு சகி"

"இது லேடீஸ் பிங்கர் இல்லைங்க, பீன்ஸ் குழம்பு, தப்பா சொல்றிங்க"

"அட என் லூசு சகி, உனக்கு இதெல்லாம் புரியாது, இத படிக்கிற என் ரீடர்ஸ்க்கு புரியும், நான் என்ன சொல்றேன்னு"

"என்னமோ போங்க, எனக்கு ஒன்னும் புரியல"

இதுக்கு மேல வர போற ஒவ்வொரு நிமிஷமும் என் காதலை உனக்கு புரிய வைக்கறதுக்கு நான் செய்ய போற திருவிளையாடல்கள் தானே....

சகி சீக்கிரமே என்மேல உனக்கும் காதல் இருக்குன்றதை உனக்கே புரிய வைக்கறேன்.......

எழுதியவர் : இந்திராணி (16-Aug-16, 10:57 am)
பார்வை : 553

மேலே