பதக்கம்

நூறு கோடி பேர் இருக்கும்
என் நாட்டில்
நூறாயிரம் பேர் திறமை
கொண்டிருக்கும் என் நாட்டில்
தூங்கும் திறமையா இல்லை
தூக்கி ஏறியப்படும் திறமை சாலிகளா

ஏன் இன்னும் நாம்
ஏற்றம் பெற்று பல பதக்கம் பெறுவோமா
இல்லை பதக்க பட்டியலில்
இடமாவது பிடிப்போமா என
இன்னும் காத்திருக்கிறோம்
ஒலிம்பிக் போட்டிகளில் !

அவனும் மனிதன் தான்
நீயும் மனிதன் தான்
அவன் கொண்ட திறமை
அளவற்று உன்னிடமும் உண்டு
பின் ஏன் நீ தோல்வி காண்கிறாய்
வீரனே !

அடுத்தவன் இலக்கை விடுத்து
உன்னுடைய இலக்கை பதித்து
முதல் இடம் பிடிக்க செய்
முதல்வனாய் விளையாட்டில் வீரனே !

ஜெய் ஹிந்தி..............

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (16-Aug-16, 4:09 pm)
Tanglish : pathakkam
பார்வை : 1771

மேலே