பற்றற்றநிலை

பள்ளியில் பயலாதது பழக்கத்தில் வருவது
பழகுவதற்கு முயற்சிக்கும் முன் அவசியம் செய் பயற்சி
பற்றற்றநிலை பயிரை மனது முழுவதும் பரவ செய்
உள்மனதோடு உரையாடு !

நீர் ஊற்றி பயிரை வள , பகைவன் நண்பன் ஒருவனாகவே தென்படுவான்
இரவு பகல், இன்பம் துன்பம் இயல்பென உணர்வாய் !
பெற்றார்கள் , உற்றார்கள் மற்றும் உறவினர்கள் இவ்வுலகுக்கு
வந்தமையை நன்குஅறி ! நன்றி பாராட்டாதே !
நீ வந்த காரணமும் உன்னால் உருவான உறவுகளை புரிந்து
உன் உள்ளத்தை தெளிவாக்கு ! பரிந்து போகாதே
நன்றியையும் எதிர்பார்க்காதே !

பயிர் வளர்ந்து செடியென காண்பாய் ! உன் உயிர் நாடியே உரமானது .
இனி உன் உள்ளுணர்வு உரையாட கேட்பாய் !
நட அதன்படி ....படிப்படியாய்,
செடி செழிப்பாகும் வரை பழகு.

பயிற்சியின் பலன் செடி மரமாகும் , உன்னை புரிந்தவர்கள் மட்டும்
செவி சாய்ப்பர்கள் பிறர் மரத்தை சாய்க்கத்துடிப்பார்கள் ...
உன் மரத்தின் வேர் நன்றாக ஊன்றதை உணர்த்த
நீ மறக்காமல் பிறர் மனதிலும் விதைத்திடு இவ்விதையை ,
மரங்கள் நிறைந்த காடுகள் காணும் நம் எதிர்காலம் !!

எழுதியவர் : இராம்பிரகாஷ் (15-Aug-16, 4:56 pm)
பார்வை : 129

மேலே