விழி வாசல் தேடி வந்த மின்னல்

பூவாகப் பிறந்திருந்தால் ...
இந்தப் பூவையும் நீ நாடியிருப்பாய்...!
இதமாக பறித்து
என்னையும் உன் தலையில் நீ சூடியிருப்பாய்...

மாறாக நான் மனிதனாய் பிறந்துவிட்டேன்
மங்கை உன்னிடத்தில்
என் மனதை இழந்துவிட்டேன்...

வஞ்சியே...இளம் கொடி வஞ்சியே...
உன் வாசம் தேடி வந்த தென்றல்தனை
வெறுக்கலாமோ - என் நந்தவனமே..?

நேசம் தேடிய தூய நெஞ்சிற்குள்
நீ ஏன் நுழைய மறுக்கிறாய்..?

தென்றல் வந்து மோதினால்
பெறுகிறாய் -சுகம்
காதலன் வந்து கெஞ்சினால்
தர மறுக்கின்றாய் உன்னகம்...!

உன்னை நான் மறக்க நினைத்தேன்
ஒவ்வொரு நாளும்...
ஆனாலும் என் நினைவுக்குள் வந்து
கணத்திற்கு கணம் - ஏனடி முளைக்கின்றாய்..?

தினமென் கனவில் வந்து
உன் முந்தானை முடிச்சை அவிழ்த்து
ஆவலாய் பேசும் - என் அழகே...!

நேரில் வந்து காணும் போதுமட்டும்
ஏனடி உன்னெழில் முகத்தை
கவிழ்த்து கொள்(ல்)கின்றாய்...?
தமிழ் பெண்ணின் நாணமா?

எழுதியவர் : கிச்சாபாரதி (18-Aug-16, 9:34 pm)
பார்வை : 226

மேலே