இளம் பொற்சிலை

மீட்டும் விரல்களோடு
தினம் பேசுவது வீணை...

காளையர்கள் தினம் தேடி இரசிப்பது
இளம் பெண் மானை...

மலர்களோடு வந்து உறவாடும் தேனீ
அவள் இதழோடு உறவாட துடிக்குது
என் இதய தென்றல்....

நீண்ட நீலக் கண் கடலோரம்
வந்து பேசத் தவிக்குது அலை....

கடைசிவரை ஏனோ...?
பேசவில்லை இந்த பொற்சிலை...!

ஆனாலும் அவளை பற்றி
நான் நினைக்காமல் இருந்ததில்லை...!

எழுதியவர் : கிச்சாபாரதி (18-Aug-16, 9:46 pm)
பார்வை : 121

மேலே