தாய் தந்தை இல்லையென்றால்

கோவில் கோவிலாய் ...தேடி ஓடி
வரம் வாங்கிப் பெற்ற என்னை...
இடையில் விட்டுவிட்டு சென்று விட்டனர்...
என் தாயும் தந்தையும்....

ஆதலால்தான் என்னவோ...?
தினம் தேடி அலைகின்றேன்...
இந்த அனாதை உயிருக்கு ....
ஒரு வாய் சோறுதரும்....
கடவுள் யாரென்று..?!

என்னை ஈன்ற தெய்வங்கள்
இன்று இங்கு இல்லாததால்....
தினம் வயிற்று பசியோடு....
ஈழத்து அனாதையாய்...
அலையுது என்னுயிரு....!

எழுதியவர் : கிச்சாபாரதி (18-Aug-16, 10:11 pm)
பார்வை : 86

மேலே