உலக அழகி
அவள் நான் இருக்கும்
ஊரில் வசிக்கும் ஊர்வசி
மேல் நகையை
மேனியில் அணியும் மேனகை
அம்பைக் கண்களாய்க்
கொண்ட ரம்பை
கிராமத்தில் பிறந்த
சுந்தரப் பெண்
அவள் போட்டியிடாததால்
அழகியானாள் சுஸ்மிதா சென்
அவள் ஐஸ்வர்யத் தாய்க்குப்
பிறந்த ஐஸ்வர்யா ராய்
ஜோராய் தத்தித் தத்தி
நடக்கும் லாரா தத்தா
வீட்டில் கிளி
வளர்க்கும் கிளியோபாட்ரா
எலி வசிக்கும்
குடிசையில் வாழும் எலிசெபெத்
இங்கிலாந்தில் பிறக்காது
இந்தியாவில் பிறந்த டயானா