ஊமை விழிகள்

மூன்றாம் முறை
வந்து விட்டான் கதிரவன்
தன் காதலியை சந்திக்க..

நீ மட்டும் வரவில்லை
என்ற தவிப்பில் நானிருக்க..
அழைப்பில் நீ!

ஐந்து நிமிட உரையாடலில்
காத்திருக்க சொன்னதையே
மறந்திருந்தாய் நீ!!

ஊமையானது
என் மொழிகள் மட்டுமல்ல!
விழிகளும் தான்!!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (20-Aug-16, 2:52 pm)
Tanglish : uumai vizhikal
பார்வை : 474

மேலே