முழுமதி அவள்

(முழுமதி அவளது முகமாகும் பாடல் மெட்டில் )

கதிரொளி அவளது முகமாகும்
எதிரொலி அவளது அகமாகும்
மீனினம் அவளது விழியாகும்
தேனினம் அவளது மொழியாகும்

மாலை நேரத்து பகலவன்
அவளது நிறமாகும்
மங்கையின் பிறப்பு மானிட
வாழ்வின் வரமாகும்

அவளின் இருவிழி பார்வையிலே
மறந்தேன் என்னை மனிதன் என்றே
அவள் விழியால் என்னுயிர்
கடத்தி சென்றுவிட்டாள்

அணுக்கழிவே இல்லாத
கூடங்குளம் அவள்தானோ
அணுக்கதிரின் பார்வை
கொல்லுது நெஞ்சம்

பார்த்ததுமே மனம் மயக்கும்
ஓவியமும் அவள்தானோ
அந்த ஓவியம் காவியமானது
கண்டு வியந்தேன்

ஒரு விழியாக நான் இருக்க
மறு விழியாக அவள் இருக்க
இடையில் பார்வை
இடையைத் தேடுதே

குளிரின் காதலை தீ அறியும்
பூவின் காதலை ஈ அறியும்
தென்றல் காதலை பூ அறியும்
எந்தன் காதலை நீ அறியாயோ ?

எழுதியவர் : குமார் (20-Aug-16, 10:01 pm)
பார்வை : 697

மேலே