லிப்ஸ்டிக்
( பெண்ணின் லிப்ஸ்டிக் காதல்
கொண்டு கவி படித்தால் )
குமிழியிலிருந்தவனை
விடுதலை செய்து
உன் உதடுகள் எனும்
குங்குமச்சிமிழின் மீதல்லவா
சிறை பிடித்தாள்
நீ கண்ணாடி பார்த்தபின்புதான்
அறிந்தேன் உன் மெய்யழகை
உண்மையழகை நான்
மறைத்திருப்பதை
உன் உமிழ்நீர் என்
உயிரையல்லவா குடிக்கிறது
இதுவரை
தேனைக்குடித்த நான்
இதழ்கரையிலல்லவா
தேனில் குளித்தேன்
தேக்கடியை உன்
நாக்கடியில் கண்டேன்
உன் இதழ்மீது
எனை தீட்டியபோதுதானடி அறிந்தேன்
ரவி வர்மன் உனக்கு சீடனென்று
ஆண்களை திட்டும்போதுதானடி
அறிந்தேன் உன்
உதடுகள் மனதானதை
மனம் மலடானதை
உன் உதடுகளின்
ஓவியங்கள்
தோற்கடித்தன
ரவி வர்மனின் காவியங்களை
நீ எனை
நனைக்கும்போதெல்லாம்
என் உடல் சூடானது
இனி
நான் என்று சொல்லாதே
நாம் என்று சொல்
ஒற்றுமை கிடைக்கிறதோ
இல்லையோ
எனக்கு நிச்சயம்
ஒத்தடம் கிடைக்கும்
நீ மாலையில்
உன் உதட்டை மட்டும்
துடைக்கவில்லை
என் உயிரையும்தான் ..
என்றும் உன் நினைவில்
லிப்ஸ்டிக்