தினம் ஒரு காதல் தாலாட்டு - தனிமை 76 = 197

“மண்டோதரி செம்மாங்கனி
அந்தரத்தில் தொங்குதடி
மஞ்சத்திலே ஊஞ்சல்கட்ட
நெஞ்சக்குழி துடிக்குதடி..!”

வட்டநிலவு கொண்ட முகம்
நித்தம் எனக்கு முத்தம் தரும்
பெற்றுக் கொண்ட காமன் முகம்
பேதை உன்புகழ் பண்பாடும்..!

கற்பனைக்கு எட்டாத கற்சிலை நீ
உன்னை கனவில் வடிக்கும் சிற்பி நான்
காந்தார கலையின் தாழ்வாரத்தில்
தவழ்ந்தாடும் தேவதையே வாழ்க நீ..!

செம்பருத்தி கன்னம் கொண்ட சுந்தரி
உன் சன்னதிக்கு நான் வாறேன் மந்தரி
காதல் பித்தத்தில் என்நெஞ்சு கணக்குது
காம பிச்சையிட்டு நீயதை குறைத்திடு..!

ஆத்தோரம் ஆலமரம்
நிழல் தர வாழும் மரம்
நிலவே நிழல் தேடி வா
நீயும் நானும் இளைப்பாறலாம்.

எழுதியவர் : சாய்மாறன் (19-Aug-16, 9:26 pm)
பார்வை : 121

மேலே