என் தோழி

முன்ஜென்ம தேடலோ
இல்லை இஜன்ம வரமோ
நீ என் தோழியாய் கிடைத்தது
நீ எந்தன்
வரி அல்லா செல்வமடி
மழை நீரைப் போல்
தூய்மை உடையவளே
உன்னை நான்
மழைநீர் சேகரிப்பு தொட்டி போல் சேமிப்பாயினடி
வார்த்தைகள் பல தேடி
வாடிப் போயினேன்
உன்னை உவமித்து கூற
என்னிடம் மட்டும் இல்லை
அந்த உவமையணி யிடமும் சொற்கள் இல்லையாம்
அன்பு காட்டுவதில்
என் தாலாட்டும் அன்னையடி நீ
உன் அன்புக்கு என்னை
கொடுத்தாலும் ஈடாகாது என் அன்பு தோழியே

எழுதியவர் : கௌசல்யா (20-Aug-16, 2:04 am)
Tanglish : en thozhi
பார்வை : 699

மேலே