நட்பிற்கு வாழ்துக்கவி -1

காலையில நீ நடந்து
சோலையில போகயில
சாலையில நிக்கும் ஜனம்
சாமியாட்டம் பாக்குதய்யா
உம்ம
ரங்க சாமியாட்டம் பாக்குதய்யா..

நிக்கட்டும் மக்களுன்னு
நீ நிக்காம போனதில்ல
நிக்காம போனாலும்
நிக்க வச்சி போனாலும்
உன் நினைவத்தான் நிக்கவச்சி
நீ மட்டும் போவியயேய்யா

மக்களோட குறையெல்லம்
நீ கேட்டு தீத்து வைப்ப
உன் குறைய சட்டையோட
சலவ செய்ய போட்டுவைப்ப

தூக்கிவச்சு பேசினாலும்
தூக்கியெறிஞ்சு பேசினாலும்
காத்தோட வந்த சேதி
காதோட போகுமய்யா
மக்களோட குறைமட்டும்
மனசுக்குள்ள போகுமய்யா
மக்க குறை யெல்லாம் சாகுமய்யா

புத்தருக்கு போதிமரம்
உனக்கு மரம் மக்களய்யா
அந்த மர விழுதுகளில்
மண்ணைத் தொட்ட விழுது
நூருண்டு
உன்னைப்போல்
விண்ணைத் தொட்ட விழுது
யாருண்டு?

எழுதியவர் : குமார் (19-Aug-16, 9:27 pm)
பார்வை : 360

மேலே