டத்தோ லீ சோங் வெய் VS லின் டான்
பிரேசில் ரியோ வில் நடைபெற்று கொண்டிருக்கும் ஒலிம்பிக் 2016 நேற்று (19/08/2016) இடம் பெற்ற ஒரு கண்கவர் போட்டியாக இருந்தது பூப்பந்தாட்ட ரசிகர்களுக்கு. ஆம் அதுதான் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் பூப்பந்தாட்ட போட்டியின் அரையிறுதி சுற்றுதான் அது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் தாக்கம் இன்றும் நெஞ்சிலிருந்து அகலவில்லை மலேஷிய மக்களின் மனதிலிருந்து. வாழ்வா! சாவா! என்று இருந்தது ஆட்டம்.
பூப்பந்தாட்ட உலகின் இரு ஜாம்பவானான மலேசியாவின் லீ சோங் வெய் மற்றும் சீனாவின் லின் டான் களம் இறங்கினர். பூப்பந்தாட்ட உலகில் இவர்களை வெற்றி கொள்வது குதிரை கொம்புதான் என்று சொல்ல வேண்டும். இவர்களுக்கு நிகர் இவர்களே. அரையிறுதி சுற்றுதான் ஆனால் அவர்கள் ஆடிய ஆட்டம் இறுதி சுற்று போல அபாரமாகவும் அரங்கமே ஆரவாரமாகவும் இருந்தது. ஆம் மலேஷிய மக்களின் இதய துடிப்பை அதிகரித்த ஒரு ஆட்டம். ஆட்டம் தொடங்கிய முதல் அரங்கம் தீப்பொறி போல் இருந்தது. லீ சோங் வெய் இந்த ஆட்டத்தில் 15-21, 21-11 மற்றும் 22-20 என்ற புள்ளியில் மிகவும் கடின பட்டு வென்றார்.
டத்தோ லீ சோங் வெய் மலேஷிய நாட்டையும் லின் டான் சீனா நாட்டையும் பிரதிநிதித்து விளையாடினர். லீ சோங் வெய் உலகின் முதல் நிலை ஆட்டக்காரர்தான், ஆனால் அவருக்கு தடைக்கல்லாக இருப்பவர் மூன்றாம் நிலை ஆட்டக்காரராக இருக்கும் லின் டான் தான். ஆம்! லின் டானை எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல, 2008 ஒலிம்பிக்கில் மற்றும் 2012 ஒலிம்பிக்கில் இதே லீ சோங் வெய்யை இரண்டு முறை வெற்றி கண்டு தங்கம் வென்ற ஒரு பலம் வாய்ந்த வீரர். மலேசியாவுக்கு முதல் தங்கம் வென்று கொடுப்பர் என்றிருக்கும் தருவாயில் இரண்டு முறையும் தோல்வியை தழுவி வெள்ளி பதக்கத்தையே வெல்ல முடிந்தது.
அதுமட்டும் இல்லாமல் இவர்களின் பூப்பந்தாட்ட விளையாட்டின் சந்திப்பில் அதிகளவு வெற்றி பெற்றது லின் டான் தான். இம்முறை இறுதி சுற்றில்தான் லின் டானை சந்திக்க வரும் என்று எண்ணி இருந்த மலேஷிய மக்களுக்கு ஏமாற்றமும் பயத்தையும் தந்தது, காரணம் இம்முறை அரையிறுதி ஆட்டத்தில் சந்திக்க நேர்ந்தது. அரையிறுதி சுற்றில் சந்தித்து எந்தவொரு பதக்கமும் இல்லாமல் தாய் நாடு திரும்புவாரா என்ற பெரிய கேள்வி குறி.
ஆட்டக்காரர்களுக்கு பதற்றம் இருக்கிறதோ இல்லையோ மலேஷிய மக்களுக்கு இதயமே வெடித்து விடும் போல் இருந்தது அவர்கள் ஆடிய ஆட்டம். இவர்களின் முகத்திலும் கடுமையான தன்னம்பிக்கை இருந்தது. இருவரும் கடுமையாக விட்டு கொடுக்காமல் அபாரமாக விளையாடினர். யார் வெற்றி பெறுவார்கள் என்று வைத்த கண் மாறாமல் பார்த்தார்கள் மலேஷிய மக்கள். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதை டத்தோ லீ சோங் வெய் நிரூபித்தார்.
தோல்விக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்
ஆனால் வெற்றிக்கு ஆயிரம் தோல்விகள் தான் காரணம்...
சபாஷ் டத்தோ லீ சோங் வெய்