தமிழ் நெஞ்சங்களில் புதைந்த புதையல்
இந்த கிறுக்கனின் கிறுக்கல்களையும்
பல கவிஞனின் கண்களுக்கு
காணிக்கையாகியத் தமிழ்க் கடவுளின்
களம் எழுத்து எனும் இத்தளம்...
தடம் பார்த்தே நடந்த என்னைத்
தடம் பதிக்க நம் தமிழ் விதைக்க
இடம் கொடுத்த கவிநிலம் இத்தளம்...
தாய்மொழியின் பெருமையைப் பறைசாற்றத்
தமிழனின் சிறப்பினை உலகம் போற்றத்
தமிழ்த்தாயின் உயரத்தை நிலைநாட்ட
தமிழனைத் தலைநிமிரச் செய்தது இத்தளம்...
படைப்புகளின் பட்டியலைத் தொகுத்திட்டு
படைப்பாளியின் உணர்வுகளைப் பதிவிட்டு
பார்ப்போரின் விழிகளில் தமிழ்ப் படையலிட்டு
பாராட்டுகளைப் பகிர்ந்தளிப்பது இத்தளம்...
அற்புதக் கவிப்பேரரசர்கள்/கவிப்பேரரசிகள்
குவிந்த இத்தமிழ்த் தேசத்தில் அகப்பட்டுக்
கொண்ட நானும் ஓர் தமிழகதி...
பெருங்காவியங்களும் பெருங்காப்பியங்களும் நிறைந்த
இப்பேராழியில் கலந்திட்ட என் கவியும் ஓர் சிறுதுளி...
உங்கள் அழகிய மொழிகளும் அடுக்கடுக்கான வரிகளும்
என் வலிகளனைத்தையும் செதுக்கிடும் ஓர் உளி...
தங்கள் தமிழ்ப் புலமையும் கவி உவமையும்
என்னை மீண்டும் தமிழை யாசிக்க சுவாசிக்கத்
தூண்டும் வளி(மூச்சு)...
இத்தளம் என் அலைப்பாயும் ஆழ்மனம்
முழுதையும் கவித்தென்றல் புயல் வீசி
மூழ்கடிக்கத் துடிக்கும் அகழி...
தினமும் இத்தளத்தைத் திறவாது
இமை மூடாது இவன் இருவிழி...
-ச.சதீஸ்குமார் அமுதவேணி

