விழித்தெழு தோழா

விழித்தெழு தோழா
விழித்தெழு..

உன் விழிரெண்டில்
வழியும் கண்ணீரும்
கடல் அலையாகும்
ஓர்நாள்..

விழித்தெழு தோழா
விழித்தெழு..

உன்னை கொன்று
சுவைக்கும் துன்பத்தையும்
இன்பமாய் சுவைப்பாய்
ஓர்நாள்..

விழித்தெழு தோழா
விழித்தெழு..

பகை கொண்ட
உள்ளங்களும்
உன் அன்பில் கரைந்து
நேசம் கொள்ளும்
ஓர்நாள்..

விழித்தெழு தோழா
விழித்தெழு..

இன்று கசந்த
உன் வாழ்க்கையும்
காவியமாய் மாறும்
ஓர்நாள்..

விழித்தெழு தோழா
விழித்தெழு..

உன்னை கல்லறையில்
புதைக்க துடித்த
இதயகல்லறையில்
உன் துன்பங்களும்
புதைந்து போகும்
ஓர்நாள்..

விழித்தெழு தோழா
விழித்தெழு..

வெற்றியை தன் பிடியில்
வைத்திருக்கும் தோல்வியும்
உன் காலடியில்
தோற்று கிடைக்கும்
ஓர்நாள்..

விழித்தெழு தோழா
விழித்தெழு..

மனதிற்கு இனிமையென
மது அருந்தி
மாண்டு விடாதே..
மனதில் உறுதி கொள்..
உன் மனமும் மணக்கும்
மல்லிகையாய்
ஓர்நாள்..

விழித்தெழு தோழா
விழித்தெழு..

விடியா இரவோடு
வீணடித்த காலங்கள் போதும்..

விதியென்று வாழ்வதை விட
தன்னம்பிக்கை எனும்
விதையை விதைத்திடு மனதுள்..

உன் கண்ணீரின்
ஈரம் பட்டு
தன்னம்பிக்கை
தளிர் விடும்
வாழ்க்கையாக..!!

குட்டி..!!

எழுதியவர் : குட்டி (21-Aug-16, 5:49 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : vizhithelu thozhaa
பார்வை : 1118

மேலே