கோமாளிகள்

கனம் ஒரு
சிந்தனையில்..

தினம் தினம்
நினைவுகளில்..

இதயம் பட்ட
ரணங்களில்..

இம்சித்த
இரவுகளில்..

நெஞ்சம் துளைத்த
தொல்லைகளில்..

ஆறாம் விரலின்
அழுகையில்..

சுகம் தந்த
சுமைகளில்..

தவற விட்ட
வாய்ப்புகளில்..

வரம்பு இல்லா
வேதனையில்..

மனதை வாட்டும்
மனிதரில்..

உறங்க மறுத்த
விழிகளில்..

கண்ணீர் சுமந்த
தலையணையில்..

உறவுகளை பிரிந்த
கொடுமையில்..

உதறி தள்ளிய
உணர்வுகளில்..

வாழ்க்கையை
தொலைத்து

என்னைப்போல்
சுற்றி திரியும்

"நாகரீக கோமாளிகள்"

ஏராளம் ஏராளம்..!!

குட்டி..!!

எழுதியவர் : குட்டி..!! (21-Aug-16, 4:50 pm)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : komaalikal
பார்வை : 430

மேலே