கவிதை 114 சந்தேகப்பட்டால் இல்லறமும் துறவறந்தான்

திருடப்பட்டால் தெய்வமும் சிலைதான்
கோபப்பட்டால் மனிதனும் மிருகம்தான்
கர்வப்பட்டால் மேதையும் பேதைதான்
பரிதாபப்பட்டால் பலமும் பலவீனம்தான்

சந்தேகப்பட்டால் இல்லறமும் துறவறந்தான்
ஆசைப்பட்டால் துறவறமும் கும்மாளம்தான்
தடுக்கப்பட்டால் இன்பமும் துன்பந்தான்
வெறுக்கப்பட்டால் உறவும் பகைமைதான்

மறுக்கப்பட்டால் வளர்ச்சியும் தளர்ச்சிதான்
ஒதுக்கப்பட்டால் பாசமும் வேஷம்தான்
பிரிக்கப்பட்டால் விடுகதையும் தொடர்கதைதான்
கலைக்கப்பட்டால் ஒற்றுமையும் வேற்றுமைதான்

செதுக்கப்பட்டால் கல்லும் சிற்பம்தான்
மறைக்கப்பட்டால் சிறுதவறும் பெருந்துயரம்தான்
தொடரப்பட்டால் தென்றலும் புயல்தான்
விளக்கப்பட்டால் கடினமும் எளிதுதான்

தேவைப்பட்டால் அமைதியும் வெகுமதிதான்
கொடுக்கப்பட்டால் சிறுஉதவியும் பெரும்வெள்ளம்தான்
சந்தோஷப்பட்டால் வேதனையும் சாதனைதான்
விருப்பப்பட்டால் சங்கடமும் சங்கீதம்தான்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (21-Aug-16, 8:33 pm)
பார்வை : 69

மேலே